படிக்க...

pimp myspace with Gickr

அறிவிப்பு

இந்த வலைப்பக்கத்தை தமிழ்மணம் ‘ PAID AGGREGATION Category’ யில் வகைப்படுத்தி இருப்பதால், தமிழ்மணம் திரட்டியில் இணைக்கவில்லை. வாசகர்கள் google reader / e-mail subscriptions மூலமாக தொடர்ந்து ஆதரவளிக்க வேண்டுகிறோம்.

Subscribe in a reader

Subscribe to தீக்கதிர் by Email

Tuesday, April 12, 2011

மக்களால் தேர்ந்தெடுக்கப்படாத பிரதமர் வாக்களிக்கவும் தவறிவிட்டார்!


அசாம் மாநில சட்டமன்றத் தேர்தலில் தனது வாக்கைப் பதிவுசெய்ய பிரதமர் மன்மோகன் சிங் தவறிவிட்டார்.

அசாமின் திஸ்பூர் தொகுதியில் மன்மோகன்சிங்கும், அவரது மனைவி குர்சரண் கௌரும் வாக்கா ளர்களாக பதிவுசெய்துள்ளனர்.

கடந்த 20 ஆண்டுகளாக அசாமில் இருந்து பிரதமர் மன்மோகன் சிங் மாநிலங்களவை உறுப்பினராக தேர்ந்தெடுக்கப்பட்டு வருகிறார். அப்போதிலிருந்து அவர் அசாமில் வாக்காளராக இருந்து வருகிறார்.

திஸ்பூர் தொகுதிக்கு திங்களன்று நடைபெற்ற தேர்தலில் பிரதமர் மன்மோகன் சிங் தனது வாக்கைப் பதிவு செய்யவில்லை என அந்த தொகுதியின் தேர்தல் அதிகாரியான ஜே.பாலாஜி தெரிவித்தார்.

திஸ்பூர் அரசு மேல்நிலைப்பள்ளியில் வாக்குச் சாவடி எண் 175-ல் வாக்காளர் பட்டியலில் 721-வது பெயராக மன்மோகன் சிங்கின் பெயர் உள்ளது.

அசாம் முன்னாள் முதல்வர் ‘ஹிதேஸ்வர் சைகியாவின் மனைவியும், அசாம் முன்னாள் அமைச்சருமான ஹேமோபிரபா சைகியாவின் வீட்டில்தான் மன்மோகன் சிங் வாடகைக்கு இருப்பதாக பதிவாகி உள்ளது. ஆனாலும் தலைமைச்செயலக வளாகத்துக்கு அருகில் உள்ள அந்த வீட்டில் மன் மோகன்சிங் ஒருபோதும் தங்கியதில்லை. 

தேர்தலில் போட்டியிட்டு மக்களால் தேர்ந்தெடுக்கப்படாமலேயே பிரதமராக நீடிக்கும்மன்மோகன் சிங், தேர்தலில் வாக்களிக்க வேண்டும் என்ற அவசியமான ஜனநாயகக் கடமையையும் நிறைவேற்றத் தவறி யிருப்பது இந்திய மக்களுக்கு இழைக்கப்பட்ட ஒரு அவமானமே!-தீக்கதிர்

No comments:

Related Posts Plugin for WordPress, Blogger...