படிக்க...

pimp myspace with Gickr

அறிவிப்பு

இந்த வலைப்பக்கத்தை தமிழ்மணம் ‘ PAID AGGREGATION Category’ யில் வகைப்படுத்தி இருப்பதால், தமிழ்மணம் திரட்டியில் இணைக்கவில்லை. வாசகர்கள் google reader / e-mail subscriptions மூலமாக தொடர்ந்து ஆதரவளிக்க வேண்டுகிறோம்.

Subscribe in a reader

Subscribe to தீக்கதிர் by Email

Thursday, April 7, 2011

சந்தேகம் சாமிக்கண்ணு -1"கள்ள ஓட்டு போட்டால் ஓராண்டு சிறைத்தண்டனை" - தமிழகத் தலைமை தேர்தல் அலுவலர் பிரவீண் குமார்.

ச.சா - யோசிக்காம திமுகவுக்கு ஓட்டுப்போட்டா அஞ்சு வருஷம் தண்டனை கிடைக்குமே...??

* * *


"ஏழைகளுக்கு நலத்திட்டங்கள் தொடர மீண்டும் திமுக ஆட்சி வேண்டும்" - காங்கிரஸ் தலைவர் சோனியா காந்தி.

ச.சா - அப்படிச் சொல்லும்போது சிறையில வாடுற ஆ.ராசாங்குற ஏழையும் நினைவுக்கு வந்துருப்பாரே...

* * *"மத்திய, மாநில(தமிழக) அரசுகள் இணக்கமாக செயல்பட்டு வருகின்றன " - மத்திய அமைச்சர் ஜி.கே.வாசன்.

ச.சா - ஸ்பெக்ட்ரம் விவகாரத்துல முழுமையான குற்றப்பத்திரிகை வரலை... இதுலருந்தே புரிஞ்சுக் கலாமே...?

* * *


"கலைஞர் வீடு வழங்கும் திட்டம் இந்தியாவில் வேறு எங்கும் இல்லை" - துணை முதல்வர் மு.க.ஸ்டாலின்.

ச.சா - மேற்கு வங்கம், கேரளாவுலயும் ஏழைகளுக்கு வீடு வழங்குற திட்டம் இருக்கு... அதுக்கெல்லாம் கலைஞர் பெயரா வைக்க முடியும்...??

நன்றி: தீக்கதிர்இன்று தீக்கதிரில்:-

No comments:

Related Posts Plugin for WordPress, Blogger...