Pages

படிக்க...

pimp myspace with Gickr

அறிவிப்பு

இந்த வலைப்பக்கத்தை தமிழ்மணம் ‘ PAID AGGREGATION Category’ யில் வகைப்படுத்தி இருப்பதால், தமிழ்மணம் திரட்டியில் இணைக்கவில்லை. வாசகர்கள் google reader / e-mail subscriptions மூலமாக தொடர்ந்து ஆதரவளிக்க வேண்டுகிறோம்.

Subscribe in a reader

Subscribe to தீக்கதிர் by Email

Friday, April 22, 2011

மீனவர் குடும்பத்திற்கு அரசு வேலை தருக!

கடலில் மீன் பிடிக்கச் செல்லும் மீனவர் களுக்கு உரிய பாதுகாப்பு வழங்குவதை உத் தரவாதப்படுத்த வேண்டும் என மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி தமிழக அரசை வலி யுறுத்தியுள்ளது.


மீனவர்கள் கொல்லப்பட்டது குறித்து உரிய விசாரணை நடத்தி, நாட்டு மக்களுக்கு உண்மையை மத்திய அரசு தெளிவுபடுத்த வேண்டும் என்றும், உயிரிழந்த மீனவர்கள் குடும்பத்தில் ஒருவருக்கு அரசு வேலை வழங்க வேண்டும் என்றும் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி வலியுறுத்தியுள்ளது.

இராமேஸ்வரம் மீனவர்கள் நான்குபேர் மீன்பிடிக்கச்சென்றபோது கொடூரமான முறையில் வெட்டிப் படுகொலை செய்யப்பட் டனர். உயிர்ப்பலியான மீனவர்களின் குடும்பத் தினர், குழந்தைகள் மற்றும் அவர்களது உற வினர்களையும் மீனவ மக்களையும் மார்க் சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் தமிழ்நாடு மாநிலக்குழு சார்பாக மாநில செயற்குழு உறுப்பினர் எஸ்.நூர்முகம்மது, கோவை தொகுதி நாடாளுமன்ற உறுப்பினர் பி.ஆர்.நட ராஜன், மதுரை கிழக்குத்தொகுதி சட்டமன்ற உறுப்பினர் என்.நன்மாறன், மீன்பிடிதொழிற் சங்க கூட்டமைப்பின் மாநிலப் பொதுச் செய லாளர் பா.கருணாநிதி மற்றும் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி நிர்வாகிகள் வியாழ னன்று நேரில் சந்தித்து ஆறுதல் கூறினர்.

தொடர்ந்து மீன்பிடி தடைக்காலங்களில் மீனவர்களுக்கும் அதனை நம்பியுள்ள ஆயிரக்கணக்கான தொழிலாளர்களுக்கும் உள்ள இடர்பாடுகள் குறித்து கேட்டறிந்தனர்.

பின்னர் அவர்கள் கூறியதாவது:

தமிழக மீனவர்கள் கொடூரமான முறை யில் படுகொலை செய்யப்படுவது தொடரும் நிலையில், அவர்களைப் பாதுகாக்க உரிய முறையில் துரிதமான நடவடிக்கை மேற் கொள்ளாமல் மத்திய - மாநில அரசுகள் பொறுப்பற்று இருக்கின்றன.

கடலில் மீன்பிடிக்கச் செல்லும் மீனவர் கள் படுகொலை செய்யப்படுவதும், ஒவ் வொரு முறையும் தமிழக முதல்வர் கருணா நிதி உரிய பாதுகாப்பு கொடுக்க வேண்டு மென்று மத்திய அரசுக்குக் கடிதம் எழுதி விட்டு, மத்திய அரசு உத்தரவாதம் அளித்து விட்டது என்று கூறி தன்னுடைய கடமை முடிந்துவிட்டது என்று இருப்பதும், ஆனால் மீனவர்கள் படுகொலை செய்யப்படும் கொடு மை நடைபெறுவதும் தொடர்கதையாக உள்ளது.

இந்த நிலையில் ஏப்ரல் மாதம்2ம் தேதி இராமேஸ்வரத்திலிருந்து விக்டர்ஸ், மாரி முத்து, அந்தோணிராஜ், ஜான்பால் எனும் 4 மீனவர்கள் மீன்பிடிப்பதற்காக கடலுக்குச் சென்றுள்ளனர். நாட்கள் சில கடந்தும் அவர் கள் கரை திரும்பாததால் கவலையடைந்த சக மீனவர்களும், உறவினர்களும் அவர் களைத் தேடி வந்தனர். இந்நிலையில் இலங் கையில் உள்ள இந்திய தூதரகத்திலிருந்து இலங்கை டெல்ப் தீவின் அருகில் ஒரு உடல் அழுகிய நிலையில் கரை ஒதுங்கி கிடைத்துள்ளதாகத் தகவல் வந்ததன் பேரில் மீனவர்களது உறவினர்கள் இலங் கைக்கு அழைத்துச் செல்லப்பட்டு, அங்கு கிடந்த உடல் இராமேஸ்வரம் மீனவர் விக்டர்ஸ் என்பவரின் உடல்தான் என அடையாளம் காணப்பட்டு, அங்கேயே இறுதிச் சடங்கும் நடத்தப்பட்டது. மற்ற மூன்று மீனவர்களின் உடலைத் தேடி வந்த நிலையில் ஏப்ரல் 12ம் தேதி அந்தோணி ராஜ் என்ற மீனவரின் உடல் சோலியாக்குடி யிலும், ஏப்ரல் 14ம் தேதி ஜான்பால் என்ற மீன வரின் உடல் காசிப்பட்டினத்திலும், ஏப்ரல் 16ம் தேதி மாரிமுத்து என்ற மீனவரின் உடல் கோட்டைப்பட்டினத்திலும் கரை ஒதுங்கிய நிலையில் கிடைத்துள்ளன. இந்த நான்கு பேரின் உடல்களும் உருக்குலைந்த நிலை யில்தான் கிடைத்துள்ளன. இந்த மீனவர்கள் அனைவரும் கொல்லப்பட்டு, கடலில் வீசப் பட்டுள்ளனர்.

பாதுகாப்பு உத்தரவாதம்

கடலில் மீன்பிடித்து, அதில் கிடைக்கும் வருமானத்தின் மூலமே தங்கள் வாழ்க்கை யை நடத்த முடியும் என்ற நிலையில் கட லுக்குச் செல்லும் மீனவர்களுக்கு எவ்வித பாதுகாப்பும் இல்லாத நிலை தொடர்வது மீனவர்கள் மத்தியில் அச்சத்தையும், மக்கள் மத்தியில் கோபத்தையும் ஏற்படுத்தியுள்ளது.

கடலில் மீன் பிடிக்கச் செல்லும் மீனவர் களுக்கு உரிய பாதுகாப்பு வழங்குவதை உத்தரவாதப்படுத்திடும் வகையில் உரிய நடவடிக்கைகளை மத்திய, மாநில அரசுகள் மேற்கொள்ள வேண்டும்.

நீதிவிசாரணை

இந்த கொலைகள் குறித்து உரிய விசா ரணை நடத்தி, நாட்டு மக்களுக்கு உண்மை யைத் தெளிவுபடுத்த வேண்டிய பொறுப்பு மத்திய அரசுக்கு உள்ளது.

அரசுவேலை

உயிரிழந்த மீனவர்கள் குடும்பத்தில் ஒருவருக்கு அரசு வேலை வழங்கவேண் டும். மீன்பிடிப்பதற்கு விதிக்கப்பட்ட தடைக் காலமான 45 நாட்களுக்கும் மீனவர்களை யும் அவர்களை நம்பியுள்ள குடும்பங்களை யும் பாதுகாக்கும் வகையில் நாள் ஒன்றுக்கு ரூ.150 (ஆண், பெண் இரு பாலருக்கும்) தமிழக அரசு வழங்கவேண்டும்.

Friday, April 15, 2011

தண்ணீர் தணிக்கை, நல்ல முயற்சி



தமிழ்நாட்டில் தேர்தல் முடிந்திருப்பதைப் போன்றே பள்ளிகளிலும் ஆண்டுத் தேர்வுகள் முடிந்துள்ளன. இந்த சந்தர்ப்பத்தை பயன்படுத்தி சென்னை நகரில் பள்ளிகளில் மாணவர்கள் பயன்படுத்தும் குடிநீர் எந்த தரத்தில் உள்ளது என்பதை கண்டறிய தண்ணீர் தணிக்கை நடைபெறவுள்ளது.

மாணவர்கள் பருகும் தண்ணீர் எங்கிருந்து வருகிறது. கிணற்று நீர் என்றால் சுத்தமாக இருக் கிறதா? நிலத்தடி நீர் என்றால் உவர் நீராக இருக்கிறதா என்று ஆய்வு செய்யப்படுவதோடு தண்ணீரின் தன்மையும் ஆய்வு செய்யப் படவுள்ளது. மழை நீர் சேகரிப்பை வலியுறுத்தி வரும் மழை மையம் (ரெயின் சென்டர் ) இந்த முயற்சியில் இறங்கியுள்ளது.

குடிநீரை பொறுத்தவரை பல பள்ளிகளில் அதிக அக்கறை எடுத்துக்கொள்வது கிடையாது. சில பள்ளிகளில் தண்ணீர் வசதியே இல்லை. மாணவர்கள் வீடுகளில் இருந்து தண்ணீர் எடுத்து வந்துதான் பருகி வருகி றார்கள். பல பள்ளிகள் குடிநீர் தொட்டி தண் ணீரைத்தான் நம்பியுள்ளன. வசதி படைத்த பள்ளிகளில் கூட மாணவர்களுக்கு குடிநீர் வசதி என்பது மிக மோசமாக உள்ளது.

தமிழகத்தை பொறுத்தவரை மழை நீர் சேகரிப்பு என்பது அரசு கட்டிடங்கள், மருத்துவ மனைகள், அடுக்குமாடி குடியிருப்புகளில் இருந்தபோதிலும் பள்ளிகளில் இல்லை. மழைக்காலங்களில் வீணாகும் நீரை பள்ளிகளில் தேக்கிவைத்தால் அதனை சுத்தப்படுத்தி குடிநீருக்கு பயன்படுத்தமுடியும் என்று மழை மையம் வலியுறுத்தி வருகிறது. மேலும் இந்த திட்டத்தை அமல்படுத்த துவங்கினால் மழைக் காலங்களில் தாழ்வான பள்ளிகளில் மழை நீர் தேங்கி வெள்ளம் ஏற்படுவதையும் தவிர்க்க முடியும் என்கிறார்கள் இந்த மையத்தினர்.

இந்த மழை நீர் நிர்வாக முறையின் முக்கியத்துவத்தை அறிந்திராமல் பல பள்ளிகள் இருப்பதுதான் கவலைதரக்கூடிய விஷயம். தரமான குடிநீரை மாணவர்கள் பருகுவதன் மூலம் தண்ணீரால் வரும் நோய்களையும் தவிர்க்கமுடியும். இந்த தண்ணீர் தணிக்கையின் ஒரு பகுதியாக ஒவ்வொரு பள்ளிக்கும் மழை மையத்தினர் சென்று மழை நீர் அறுவடைக்கான வாய்ப்புகளை சேகரிக்கவுள்ளனர்.

மேலும் இந்த பணியில் மாணவர்களையும் ஈடுபடுத்த உள்ளதால் அவர்கள் மழை நீர் சேகரிப்பு பணி குறித்த விழிப்புணர்வை பெறுவதோடு மக்களிடமும் இந்த திட்டத்தின் பயன்களை விளக்குவது, இப்போது இல்லாவிட்டா லும் எதிர்காலத்திலாவது நல்ல பலன்களை ஏற்படுத்தும். மேலும் பல்வேறு வகையான தண் ணீரை எந்தெந்த பயன்பாட்டிற்கு பயன்படுத்த வேண்டும் என்பதை மாணவர்கள் அறிந்து கொள்ள இந்த தண்ணீர் ஆய்வு பயன்படும்.

மாணவர்களின் நலனில் அக்கறை கொண் டுள்ள அரசுப் பள்ளிகள் உள்பட சில தனியார் பள்ளிகள் இந்த முயற்சியை வரவேற்றுள்ளன. பள்ளிகளில் தண்ணீர் ஆய்வோடு நிறுத்திக் கொள்ளாமல் மாணவர்களுக்கான கழிப்பறை உள்ளிட்ட அடிப்படை தேவைகள் குறித்தும் ஆய்வு செய்வது அவசியம். 3ஆயிரத்திற்கும் மேற்பட்ட மாணவர்கள் படிக்கும் பள்ளிகளில் பெயருக்கு கழிப்பறைகள் இருப்பது குறித்து பல செய்திகள் வந்து விட்டன. மேலும் தண்ணீர் வசதி இல்லாதவைகளாக அவை உள்ளன. எனவே இது போன்ற ஆய்வுகளின் முடிவில் அளிக்கப்படும் பரிந்துரைகளை பள்ளிக் கல்வித்துறையும் மாநகராட்சியும் அமல்படுத்த வேண்டும். மேலும் மாணவர்களின் உடல் ஆரோக்கியத்தை கருத்தில் கொண்டு நடத்தப்படும் இது போன்ற ஆய்வுகளின் முழு நோக்கம் நிறைவேறினால் மகிழ்ச்சிதான்.

Thursday, April 14, 2011

வாக்காளர் கடமை முடியவில்லை....




தேர்தலும் முடிந்துவிட்டது. மே 13 வரை அதிகாரபூர்வமான அறிவிப்புக்கு காத்திருக்க வேண்டும். ஆயினும், தமிழகத்தில் ஆட்சி மாற்றம் உறுதி என்பதை சொல்லவும் வேண்டுமோ?


இந்தத் தேர்தலில் ஊழல், குடும்ப ஆட்சி போன்ற பிரச்சனைகள் முக்கிய இடம் பெற்றன. அதற்கு நிகராக அனைத்துப்பகுதி மக்களாலும் பேசப்பட்ட மிக முக்கியமானப் பிரச்சனை விலை உயர்வே. இன்னும் சொல்லப்போனால், ஒரு கிலோ அரிசி ஒரு ரூபாய் என்ற அரசின் திட்டத்தாலும் ஏறிய விலையின் சுமையை குறைக்க முடியவில்லை. இதன் வேதனையும் கோபமும் தேர்தல் பிரச்சாரம் நெடுகிலும் மக்களிடம் எதிரொலிக்கக் கண்டோம்.


ஆட்சி மாறியதும் விலை குறைய வேண்டும் என்பது மக்கள் எதிர்பார்ப்பு. ஆனால், ரிசர்வ் வங்கி அபாயச் சங்கு ஊதியிருக்கிறது. அத்தியாவசியப் பொருட்கள் மட்டுமின்றி அனைத்துப் பொருள்களின் விலையும் குறைய வாய்ப்பில்லை என்று ரிசர்வ் வங்கி ஆய்வு கூறுகிறது. குறிப்பாக வீட்டு உபயோகப் பொருட்களின் பணவீக்கம் 11.8 விழுக்காட்டிலிருந்து 13.1ஆக உயரும் என்று அந்த ஆய்வு கண்டு சொல்லி யுள்ளது. உணவுப் பொருட்களின் விலை குறைய வாய்ப்பில்லை என்றும் ரிசர்வ் வங்கி ஆய்வு தெளிவுபடுத்துகிறது.


உணவுப்பொருள்களின் விலையேற்றத்திற்கு மழையும் பருவமாறுதலும்தான் காரணம் என மத்திய-மாநில ஆட்சியாளர்கள் கூறிவந்த வெற்றுச் சாக்குகள் இப்போது அம்பலமாகி விட்டன. வேளாண் விளைச்சல் அதிகரித்தா லும் உணவுப் பொருள் விலை குறையாது என ரிசர்வ் வங்கி கூறுவதின் மர்மம் என்ன?


ஊக வணிகமும் முன்பேர வணிகமும் மிகப் பெரிய அளவில் நடைபெற்றுக்கொண்டிருக்கின்றன. இவர்களின் லாப வெறிக்கு வேளாண் பொருட்களை உற்பத்தி செய்யும் விவசாயிகளும் பலியாகிறார்கள். வாங்கிச் சாப்பிடும் அனைத்துப் பகுதி மக்களும் பாதிக்கப்படுகிறார்கள். வெங்காயம், கரும்பு, நெல், காய்கறிகள், தானியங்கள், பழங்கள் எதுவானாலும் அதற்கு உரிய நியாயமான கட்டுப்படியான விலை விவசாயிக்குக் கிடைக்காது. ஊக வணிகர்களும் முன்பேர வணிகர்களும் முன்கூட்டியே பேரம் பேசி கடன் கொடுத்து தவிட்டு விலை நிர்ணயித்து விடுகிறார்கள். இதனால் விவசாயி ஓட்டாண்டி ஆகிறான். உழுபவன் கணக்குப்பார்த்து உழக்கு கூட மிஞ்சாமல் வேதனைக் கண்ணீர் வடிக்கிறான். ஆனால், பொருளையே பார்க்காமல் கம்ப்யூட்டர் முன்னால் அமர்ந்து கொண்டு வர்த்தகம் நடத்தும் சூதாடிகள் பல்லாயிரம் கோடி கொள்ளையடிக்கிறார்கள். இதைத் தடுக்காமல், வெறும் வார்த்தைகளால் விலைவாசியை ஒருபோதும் குறைக்க முடியாது.


அதுபோல அரசின் ஏற்றுமதி இறக்குமதி கொள்கை உள்நாட்டு விவசாயிகள் நலன் மற்றும் பொதுமக்கள் நலன் இரண்டையும் சார்ந்திருக்க வேண்டும். ஆனால், தற்போது அப்படி இல்லை. பன்னாட்டு நிறுவனங்களின் கோர லாபப் பசிக்கு உள்நாட்டு விவசாயிகளை வஞ்சித்து, வேளாண் பொருட்களை கொட்டிக் கொடுக்கும் கொடுமைதான் தொடர்கிறது. இதனால், விவசாயிகளும் பொதுமக்களும் விலைவாசி அரக்கனின் உடும்புப் பிடியிலிருந்து மீளமுடியாமல் தவிக்கிறார்கள்.

நாடு தழுவிய மக்களின் மாபெரும் போராட்ட எழுச்சிதான் இந்தத் தவறானப் பொருளாதாரக் கொள்கைகளை திருத்தி அமைக்கும் ஒரே வழி. விலைவாசி குறைய வாக்களித்ததோடு வாக்காளர் கடமை முடியவில்லை,

வீதியில் கோடிக்கால் பூதமாய் திரண்டெழுந்து போராடவும் தயாராக வேண்டும். அதுவும் ஜனநாயகக் கடமையே.

துள்ளாத மனத்தையும் துள்ள வைத்த கவிஞர்!

மக்கள் கவிஞர் பட்டுக்கோட்டை கல்யாணசுந்தரம் இந்தப் பூவுலகில் வாழ்ந்தது 29 ஆண்டுகள் மட்டுமே. 1930ம் ஆண்டு பிறந்த அவர் 1959ம் ஆண்டில் இயற்கை எய்திவிட்டார். 1954ம் ஆண்டு படித்தபெண் திரைப்படத்தில் அவரது முதல் பாடல்  இடம் பெற்றது. 56 படங்களுக்கு 196 பாடல் கள் மட்டுமே எழுதியுள்ளார். ஆனால் தமிழ்த் திரைப்பட வரலாற்றை எழுதுவோர் மட்டுமின்றி, தமிழ் இலக்கிய வரலாற்றை எழுதுவோரும் தவிர்க்க முடியாத பெயராக மக்கள் கவிஞர் பட்டுக்கோட்டை கல்யாணசுந்தரத் தின் பெயர் விளங்குகிறது என்றால், இதற்குக்காரணம் அவரது பாடல்களில் செறிந்திருந்த தத்துவத்தெளிவும், எளிமையும், லட்சியப்பிடிப்புமே ஆகும். 


திரைப்படங்களில் பங்கேற்ற கலைஞர்களின் பெயர்களைப் போடும்போது, பாடல்கள் பட்டுக்கோட்டை கல்யாணசுந்தரம் என்ற பெயர் வரும்போது மக்கள் ஆரவாரமாக கைதட்டி மகிழ்ந்தனர். இத்தகைய சிறப்பு பெற்ற முதல் திரைக்கவிஞர் இவர்தான். தஞ்சாவூர் மாவட்டம் பட்டுக்கோட்டை வட்டம் செங்கப்படுத்தாங்காடு என்ற சிற்றூரில் ஒரு எளிய உழவர் குடும்பத்தில் பிறந்த அவர், அதிகம் படிக்கவில்லை. பள்ளிக் கூடம் இல்லாத ஊருக்கு படிக்கப் போறேண்டா, அங்கே படிக்க வேண்டியது நிறைய இருக்கு படிச்சுட்டு வாறேண்டா என்று பாடிய அவர் அனுபவம் என்ற ஆசிரியரிடம்தான் அதிகம் படித்தார்.


உழவர்கள் படும் துயரத்தை இவர் அளவுக்கு யாரும் திரைப்பாடல்களில் இதுவரை சொன்னதில்லை. சும்மா கிடந்த நிலத்தை கொத்தி - சோம்பலில்லாமல் ஏர் நடத்தி- நெல்லு வௌஞ்சிருக்கு- வரப்பும் உள்ள மறஞ்சிருக்கு- அட காடு வௌஞ்சென்ன மச்சான்- நமக்கு கையுங்காலுந்தானே மிச்சம்- என்பது எம்ஜிஆர் தயாரித்து இயக்கி இரட்டை வேடங்களில் நடித்த நாடோடி மன்னன் படத்தில் இவர் எழுதிய பாடல். இந்தத்திரைப்படம் வெளிவந்த ஆண்டு 1958. இன்னமும் கூட விவசாயிகள் நிலைமை இப்படித் தானே இருக்கிறது.


வருணாசிரம ஆதிக்கம் தொழில் ரீதியாக ஜாதிகளை பிரித்தது. குறிப்பிட்ட தொழில் செய்வோரை மட்டு மின்றி அந்தத் தொழிலையும் இழிவுப டுத்தியது. ஆனால் மக்கள் கவிஞரோ செய்யும் தொழிலே தெய்வம்- அதில் திறமை தான் நமது செல்வம் என்று பாடினார். தமிழ்த்திரையுலகில் பல்வேறு தொழில்களைப் பற்றியும், அந்தத் தொழிலில் ஈடுபட்டுள்ள தொழிலாளர்களைப் பற்றியும் இவரளவுக்கு யாரும் பாடியதில்லை. 

பாசவலை படத்தில் ஆடு மேய்க்கும் தொழிலாளர்கள் பாடுவதாக இவர் பாடிய பாடல் இது- கணக்குமீறி தின்றதாலே-  கனத்த ஆடு சாயுது- அதை கண்ட பின்னும் - மந்தையெல்லாம் அதுக்கு மேலே மேயுது- பணக் கிறுக்கு தலை யிலேறி- பகுத்தறிவு தேயுது-
என்று கவிஞர் எழுதிய பாடலை இன்றைக்கு வெளிவரும் பல செய்திகளோடு பொருத்திப்பார்த்தால் பல உண்மைகள் புரியும். 


மாட்டுவண்டி ஓட்டிச்செல்லும் விவசாயத் தொழிலாளி உச்சி மலை யிலே- ஊறும் அருவிகள்- ஒரே வழி யிலே கலக்குது- ஒற்றுமையிலா மனிதகுலம்- உயர்வும் தாழ்வும் வளர்க்குது என்று பாடுவதாக அமைத்த கவிஞர், பள்ளம் மேடுள்ள பாதையிலே- பார்த்து நடக்கணும் காளைகளே- பழைய போக்கிலே பயனில்லை- நல்ல விஷயம் இருக்கணும் மூளையிலே என்று துவங்கியிருப்பார். டீ விற்கிற தொழிலாளி இப்படிப் பாடுவார்- பாட்டாளி தோழருக்கும்- பல தொழிலாளருக்கும்- கூட்டாளி யாயிருக்கும் டீ என்று பாடிச்செல்லும் கவிஞர், சகலரும் விரும்பும் டீ- பலருக்கு சாப்பாடு கூட இந்த டீ என்று கூறியிருப்பார். இது இன்று வரை எத்தனை எத்தனை அர்த்தம் பொதிந்த வரிகள். 


பாட்டாளி மக்களின் துயரங்களை பாடிய கவிஞர், அவர்களை ஆன்மீக போதையில் ஆழ்த்துவதில்லை. விரக்தி பள்ளத்தாக்கை நோக்கி விரட்டிவிடுவதும் இல்லை. ஒரு தாய் குழந்தைக்கு சோறூட்டுவதைப் போல நம்பிக்கையையும், போராட்ட உணர்வையும் குழைத்து தொழிலா ளர்களுக்கு ஊட்டிக்கொண்டே இருந் தார். நெடுங்கவலை தீர்ந்ததென்று- நெஞ்சில்  எழுதி ஒட்டிவை- நெரிஞ்சிக் காட்டை அழித்து- அதில் நெல்லு விதையை கொட்டிவை- ஏழைகளின் புது உலகம் தெரியுதடா- நாம் ஏமாந்து வந்த நிலை ஒழியுதடா என்று கூறுவார். அவரது பாடல்களில் இந்த நம்பிக்கை நதி ஊற்றெடுத்து பெருகிக்கொண்டேயிருக்கும்.


துள்ளாத மனமும் துள்ளும், உனக்காக  எல்லாம் உனக்காக, உள்ளங்கள் ஒன்றாகி துள்ளும் போதிலே, இன்று நமதுள்ளமே- பொங்கும் புதுவெள்ளமே, வாடிக்கை மறந்ததும் ஏனோ- எனை வாட்டிட ஆசைதானோ, நெஞ்சில் குடியிருக் கும்- அன்பருக்கு நானிருக்கும் நிலைமை என்னவென்று தெரியுமா, ஆசையினாலே மனம்- ஓஹோ அஞ்சுது கொஞ்சுது தினம், துள்ளித் துள்ளி அலைகளெல்லம் என்ன சொல்லுது, ஆடை கட்டி வந்த நிலவோ,  என்னருமை  காதலிக்கு வெண்ணிலாவே என்று அவர் எழுதிய காதல் பாடல்களும் கூட காலத்தைக்கடந்து கானம் இசைத்துக் கொண்டிருக்கின்றன.


காதல் பாடல்களிலும், தாம் எழுதிய ஒன்றிரண்டு கடவுள் பாடல்களிலும் கூட பொதுவுடைமை கருத்துக்களை பொதித்து வைக்க பட்டுக்கோட்டை தவறியதில்லை. சின்னப்பயலே, சின்னப்பயலே சேதி கேளடா என்ற பாடலில் நரம் போடுதான் பின்னி வளரணும் தன் மான உணர்ச்சி என்று கூறியிருப்பது சின்னப்பயல்களுக்கு அல்ல. பெரிய ஆட்களுக்குத்தான். காலம் கடந்து வாழ்கிறார் மக்கள் கவிஞர். காரணம் தமிழ் மண்ணின் காற்றோடு கலந்து கிடக்கிறது அவரது பாடல் வரிகள்.


(இன்று (ஏப்ரல் 14) மக்கள் கவிஞர் பிறந்த நாள்)

Wednesday, April 13, 2011

ராகுல்காந்தியின் இரட்டை நாக்கு!



இந்தியா தனது கொள்ளுத்தாத்தா நேருவுக்கு சொந்தமானது என்றுதான் பேரப்பிள்ளை ராகுல்காந்தி நினைத்துக் கொண்டிருக்கிறார். தமிழ்நாட்டிற்கு தேர் தல் பிரச்சாரம் செய்ய வந்த இவர், தனது பாட்டி இந்திராகாந்தி தமிழ்நாட்டுக்கு வந்து விட்டு திரும்பும்போது தமிழ்நாட்டைப்பற்றி கதைகதையாகக் கூறுவார் என்று குறிப்பிட்டுள்ளார். பாட்டி வடை சுட்ட கதை, நரி ஏமாந்த கதை போன்ற கதைகளையும் கூட இவருக்கு சொல்லியிருக்கக் கூடும். வாயைக்கொடுத்து வாங்கிக்கட்டிக் கொள்வது குறித்தும் தமிழ்நாட்டில் ஏராளமான கதைகள் உண்டு. இதையும் இந்திராகாந்தி இவருக்கு சொல்லிக்கொடுத்திருந்தால் நல்லது.

தமிழ்நாட்டில் திமுகவிடமிருந்து 63 தொகுதிகளை காங்கிரஸ் பறித்துக்கொண்டதற்கு இவரும் ஒரு முக்கியக்காரணம் என்று கூறப்படுகிறது. அந்த 63 தொகுதிகளிலும் உள்குத்தாக தமது இளைஞர் காங்கிரசை சேர்ந்த சிலருக்கு சீட் வாங்கிக் கொடுத்துள்ளார். அந்த சிலர் தொகுதியை இன்னும் தேடிக்கொண்டிருப்பதாக தகவல்.

தாம் சீட்டு வாங்கிக்கொடுத்த அவர்களுக்குக் கூட ராகுல்காந்தி முழுமையாக பிரச்சாரம் செய்யவில்லை. மின்னல் வேகத்தில் வந்துசென்றுவிட்டார்.

அப்படி வந்த இடத்தில், இந்தியாவின் வளர்ச்சி பெற்ற மாநிலங்களில் தமிழ்நாடு முதலிடத்தில் இருப்பதற்கு முழுமுதற்காரணம் கலைஞர்தான் என ஒரே போடாக போட்டிருக்கிறார். அப்படிப்பட்ட கலைஞரைத்தான் தில்லிக்கு வந்தபோது ஆறு மணி நேரம் இவர் காக்க வைத்ததாக தகவல். (தகவல் உதவி: தி.க.தலைவர் கி. வீரமணி) 

தமிழ்நாட்டில் பிரச்சாரத்தை முடித்துக் கொண்டு கேரளம் சென்ற இவர், அச்சுதானந்தனுக்கு இப்போது வயது 87 ஆகிறது. இவர் முதல்வராக வந்தால் ஐந்தாண்டு முடிவில் கேரளத்திற்கு 92 வயதுக்காரர்தான் முதல்வராக கிடைப்பார் என்று பேசியுள்ளார்.

நல்லவேளை இவர் காலத்தில் மகாத்மா காந்தி இருந்திருந்தால் அவரை கட்சியை விட்டு நீக்கியிருப்பார்.

தமிழ்நாட்டில் இவரால் பாராட்டப்பட்ட மு.க.அழகிரி உள்ளிட்டவர்களால் முதல்வராக முன்னிறுத்தப்படுகிற கலைஞருக்கு வயது 88. இவர் முதல்வராக தேர்வு செய்யப்பட்டால் ஐந்தாண்டு முடிவில் 93 வயதுக்காரர்தான் தமிழ்நாட்டின் முதல்வராக இருப்பார்.

கலைஞர் மீதுள்ள கோபத்தை கேரளத்திற்கு சென்று காட்டியிருக்கிறார் ராகுல் காந்தி. அல்லது தமிழ்நாட்டில் பிரச்சாரம் செய்தபோது இவருக்கு கணக்கில் தடுமாற்றம் ஏற்பட்டிருக்கிறது.

கேரள முதல்வர் வி.எஸ்.அச்சுதானந் தன் தேர்தல் பிரச்சாரத்தில் துள்ளிக்குதித்து ஓடுவதை ஊடகங்கள் வியப்போடு எழுதுகின்றன. அவர் செல்லும் இடமெல்லாம் மக்கள் வெள்ளமென கூடுகிறார்கள். அண்மையில் சபரிமலை மீது ஏறி அடிப்படை வசதிகள் குறித்து அவர் நேரடியாக ஆய்வு செய்தது கேரளத்தில் மிகப் பெரிய செய்தியாக வெளியானது.

மத்திய அரசில் நிதியமைச்சராக உள்ள பிரணாப் முகர்ஜி, பிரதமர் மன்மோகன்சிங் உள்ளிட்டோரும் கூட வயதானவர்கள்தான்.

இவருக்கு சரியான முறையில் பதிலடி கொடுத்திருக்கிறார் கேரள முதல்வர் அச்சுதானந்தன். ‘ராகுல் காந்தி ஒரு அமுல் பேபி, சில அமுல் பேபிகளுக்காகத்தான் அவர் பிரச்சாரம் செய்ய வந்துள்ளார்’ என்று குறிப்பிட்டுள்ளார். மேலும் கேரளக்கவிஞர் டி.எஸ்.சுப்பிரமணியன் திருமும்புவின் கவிதை ஒன்றை அவர் மேற்கோள் காட்டி ராகுலுக்கு பதில் சொல்லியுள்ளார். 

தலை நரைத்ததல்ல எனது முதுமை. 

தலை நரைக்காததல்ல எனது இளமை

கொடிய துஷ்ட அதிகார சக்தியின் முன்பு

தலை குனியாததே எனது இளமை

என்பது அந்தக் கவிதை.

16 வயதிலேயே சுதந்திரப்போராட்டத் தின் வழியாக தாம் அரசியலுக்கு வந்துவிட்டதாகவும், ராகுல் காந்தி 40 வயது வரை எங்கே போயிருந்தார் என்றும் அவர் கேட்டிருக்கிறார்.

ராகுலைக்கேட்டால் கோல்ப் விளையாடிக்கொண்டிருந்தேன் என்று கூறியிருப்பார். கோல்ப் மைதானத்தில் பந்துகளை அடிப்பதைப்போல சொந்த கட்சியினரையே உருட்டிக்கொண்டிருப்பதுதான் ராகுலின் சாதனை.

தமிழ்நாட்டில் பேசும்போது ஒரு ரூபாய்க்கு ஒரு கிலோ அரிசி பற்றி பேசியிருக்கிறார். மத்திய உணவுக்கிடங்குகளில் வீணாகும் தானியத்தை ஏழை மக்களுக்கு தரமாட்டோம் என இவரது கட்சியின் தலைமையிலான அரசு கூறியதற்கு உச்சநீதி மன்றம் கண்டித்த செய்தியை இவர் அறிவாரா?

திருப்பூர் சாயப்பட்டறை பிரச்சனைக்கு மாநில அரசுடன் இணைந்து தீர்வு காணப்படும் என்றும் கூறியுள்ளார். காங்கிரஸ் கட்சியே இன்றைக்கு ஊழல் முடை நாற்றம் வீசும் ஒரு கழிவுநீர் குட்டையாக மாறிக் கொண்டிருக்கிறது. இதை முதலில் சுத்தம் செய்யட்டும் இவர்.

- மதுரை சொக்கன்

சங்கராச்சாரியார் மீது அப்படியென்ன திடீர் பாசம்?


கைது நடவடிக்கையைக் கூட அரசியலாக்க தெரிந்தவர் கலைஞர் கருணாநிதி. தான் கைது செய்யப்பட்டதை வைத்தே விடிய, விடிய தொலைக்காட்சிகளில் ஓட்டி வாக்குகளைப் பெற்ற அவரின் வித்தை ஊரறிந்த உண்மையாகும்.

ஆட்சிக்கு வந்த போது காவல்துறையின் ஈரல் கெட்டுவிட்டதாக காவல்துறையின் அமைச்சராக இருக்கும் கருணாநிதியே சொன்னதைக் கேட்டு தமிழகமே திகைத்துப் போனது. கெட்டுப்போன ஈரலுக்கு கடந்த 5 ஆண்டுகளாக மருத்துவம் செய்திருப்பார் என்று நினைத்தால், செய்யவில்லை என்பதற்கு பல உதாரணங்களைச் சொல்ல முடியும்.

சென்னை சட்டக்கல்லூரியில் மாணவர்களுக்குள் நடந்த மோதலை,” மானாட மயிலாட” பார்ப்பது போல காவல்துறை பார்த்துக் கொண்டிருந்ததை உலகமே பார்த்தது. வெற்றிவேல் என்ற காவல்துறை அதிகாரி பட்டப்பகலில் வெட்டப்பட்டு ரோட்டில் கிடந்த போது, அதை அமைச்சர்கள் வேடிக் கைப் பார்த்ததையும் நாடு பார்த்தது. 

தற்போது முதல்வர் போட்டியிடும் அவரது சொந்த ஊரான திருவாரூர் வன்முறைகளின் தலைநகரமாகத் திகழ்கிறது. கள்ளச்சாராய வியாபாரிகளால் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மகத்தான தலைவர் நாவலன் வெட்டிப்படுகொலை செய்யப்பட்டார். திருவாரூர் திமுக மாவட்டச்செயலாளர் பூண்டி கலைச்செல்வன் வீடு புகுந்து வெட்டிக் கொல்லப்பட்டார். மதுரையில் முன்னாள் திமுக அமைச்சர் தா.கிருட்டிணன் நடை பயிற்சி முடிந்து திரும்பிய போது வீட்டின் அருகிலேயே கொல்லப்பட்டார். கருத்துக் கணிப்பு வெளியிட்ட காரணத்தால் தினகரன் நாளிதழில் 2 பொறியாளர்கள் உள்ளிட்ட மூவர் எரித்துப்படுகொலை செய்யப்பட்டனர். 

சட்டமன்றத் தேர்தலுக்காக வாக்குகளை எப்படியாவது பெற்று வெற்றி பெற வேண்டும் என்பதற்காக “மறக்கமுடியுமா” என்ற பழைய தேய்ந்து போன ரீல்களை எடுத்து தனது தொலைக்காட்சியில் கலைஞர் சுழல விட்டுள்ளார். இதில் காஞ்சி சங்கராச்சாரியார் கைது செய்யப்பட்ட காட்சியும் வருகிறது. இந்த ஆட்சியை மாற்றுவதற்கு ஆரிய யுத்தமே நடக்கிறது என எழுதியும், பேசியும் வரும் கருணாநிதி, தற்போது நடத்துவது திராவிட யுத்தமா? காஞ்சி சங்கராச்சாரியார் கைது நடவடிக்கையைப் பாராட்டிய மானமிகு அய்யா கி.வீரமணியை தற்போது பக்கத்தில் வைத்துக் கொண்டு இப்படிப்பட்ட காட்சியை ஒளிபரப்ப கலைஞர் எப்படி துணிந்தார்?

கொலைவழக்கில் குற்றம் சாட்டப்பட்ட வரை கைது செய்யக்கூடாது என கலைஞர் சொல்ல வருகிறாரா? சங்கராச்சாரியார் மீது அப்படி என்ன கலைஞருக்கு திடீர் பாசம்? கொலை வழக்கில் கைது செய்யப்பட்ட சங்கராச்சாரியாரை காவல்துறை அழைத்துப் போவதை திரும்ப திரும்பக் காட்டி, மறக்க முடியுமா எனக்காட்டத்துணிந்த கலைஞர் தொலைக்காட்சிக்கு, தினகரன் எரிப்பு வழக்கில் மு.க.அழகிரி கைது செய்யப்பட்டு காவல்துறையால் அழைத்து வரப்பட்டதை ஒருமுறையாவது காட்டியிருக்குமா? அதற்கான துணிவு இல்லையே!

-மௌரியன்

Tuesday, April 12, 2011

தேர்தல் ஆணையத்திற்கு எப்படி ‘செக்’ வைக்கிறது?


தேர்தல் ஆணையத்தின் நடவடிக்கைகள் காரணமாக தமிழகத்தின் பல் வேறு இடங்களில் பல கோடிக்கணக்கான ரூபாய் சிக்கியுள்ள நிலையில், அறிவாலயத்தில் அவசரக்கூட்டம் கூடுகிறது.

கலைஞர்: ஆளுங்கட்சியை எதிர்க்கட்சியாக்க தேர்தல் ஆணையம் நடவடிக்கை எடுத்து வருகிறது. ஆனால், தேர்தல் ஆணையத்தின் நடவடிக்கை தவறானது எனச் சொல்லமாட்டேன். தேர்தல் ஆணையம் செயல்பாடுகள் கேள்விக்குள்ளாக்கப்பட்டு வருகிறது. ஆனாலும், தேர்தல் ஆணையத்தினை குறை சொல்ல மாட்டேன்.

துரைமுருகன்: என்ன தலைவரே! கஜினி சூர்யா மாதிரி பேசுறீங்க! இப்ப நாம தேர்தல் ஆணைய நடவடிக்கைகளை எதிர்க்கிறோமா, இல்லையான்னு சொல் லுங்க தலைவரே . . .

அன்பழகன்: மாநில சுயாட்சி முழக்கத்தை நாம் கைவிட்டுவிட்டதால், மத்திய அரசை நம்பிக்கிடக்க வேண்டியுள்ளது. இப்போது தேர்தல் ஆணையத்தை காங்கிரஸ்தான் தூண்டிவிடுகிறதோ என்ற அச்சம் சில நாட்களாக இருக்கிறது.

கனிமொழி: திமுக கொள்கையை திஹாரில் விட்டு ரொம்பநாளாச்சுன்னு காங்கிரஸ் கட்சிக்காரங்க கூட சொல்றாங்க. திமுக, கொள்கையை மறந்த மாதிரி ஆ.ராசாவையும் மறந்துடுச்சுன்னு டில்லியில் உள்ள பிரஸ் நண்பர்கள் சொல்றாங்க.

துரைமுருகன்: கடந்த தேர்தலில் கொடுத்த வாக்குறுதியையே மறந்துட்டோம். கொள்கையை எப்படி ஞாபகத்தில் வைச்சுருக்க முடியும்?

கலைஞர்: பேராசிரியர் பெருந்தகை சொன்ன விஷயத்தை மறந்துட்டு, எதை எதை மறந்தோம்னு பேசிக்கிட்டு இருக்கிறீங்க! தேர்தல் ஆணைய நடவடிக்கைக்கு எப்படி நாம் “செக்” வைக்கிறதுன்ற யோசனையை முதல்ல சொல்லுங்க . . 

துரைமுருகன்: “ஆணையமா? ஆணவமா?” என்ற தலைப்பில நம்ம கவிஞர் வைரமுத்து தலைமையில் ஒரு கவியரங்கம் நடத்துவோம். தம்பி பா.விஜய் உள்ளிட்ட பலர் தயாராக இருக்கிறாங்க!

கனிமொழி: ஜெகத்ரட்சகன கவிதை வாசிக்க விட்டுறாதீங்க . . . அவரோட கவிதையைக் கேட்டு நான் கவிதை எழுதுவதை நிறுத்தியே நாளாச்சு! முழுசா என்ன எழுதவிடாமல் செய்துடாதீங்க!

ஆர்க்காடு: யார் கவிதை எழுதுறது, வாசிக்கிறதுன்றது முக்கியமில்லை. ஒவ்வொரு கவிதையும் ரொம்ப “பிரைட்டா” இருக்கணும்!

அன்பழகன்: என்னது பிரைட்டா? அப்படின்னா? 

ஆர்க்காடு: சரி, சரி, அதுதான் சீட்டு தராமல் முடிச்சாச்சில்ல. . . கருத்து கூட சொல்லக்கூடாதா?

தயாநிதி: பிரம்மாண்டமா செட் போட்டுடுவோம். இந்தியத் தொலைக்காட்சி வரலாற்றில் முதல்முறையாக எனச்சொல்லி 2 வாரம் எபிசோட் போட்டிரலாம்.

ஸ்டாலின்: அமிர்தம் மாமா கோவிச்சுகிடுவாரு மாப்ளே! கலைஞர்ல லைவ் செய்திடுவோம். என்ன நான் சொல்றது?

துரைமுருகன்: தயாநிதி தம்பி! நீங்க பார்க்க எம்.ஜி.ஆர் மாதிரி தகதகன்னு மின்னுறீங்க. பேசாமல் படத்தயாரிப்ப விட்டுட்டு நடிக்க வந்திடுங்களேன். உலகத்தொலைக்காட்சி, உள்ளூர் தொலைக்காட்சி எல்லாத்திலேயும் உங்க படத்த ரிலீஸ் செய்திடலாம்!

அழகிரி: நான் இருக்கிறத மறந்து நீங்களா பேசிக்கிட்டு இருக்கிறீங்க . . . 

ஸ்டாலின்: கேப்டன்ன தாக்க நம்ம வடிவேலுவ தயார் செய்தது போல, தேர்தல் ஆணையத்தைத் தாக்கிப் பேச போண்டாமணியை விட்டா என்ன?

அன்பழகன்: தலைவரே! எனக்கு ஒரு யோசனை. நீங்க உடன்பிறப்புக்கு கடிதம் எழுதுற மாதிரி பிரதமருக்கு அடிக்கடி கடிதம் எழுதுற மாதிரி, ஒரு நாலு நாளைக்கு தேர்தல் ஆணையத்திற்கு கடிதம் எழுதினா என்ன?

(கனிமொழி சிணுங்கிய தொலைபேசி யை எடுத்தவாறு,) “என்ன அங்கயும் பிடிச் சாச்சா? அப்படியா?” எனக் கேட்டவாறு,

கனிமொழி: தேர்தல் ஆணையம் ஒரு பக்கம் ரைடுன்னு பணத்தைப் பிடிச்சுக்கிட்டு இருக்க மாதிரி, யாரோ தேர்தல் அதிகாரி மாதிரி வேஷம் போட்டு போன பணத்தையெல்லாம் மடக்கி எடுத்துட்டு போயிட்டானாம்!

அன்பழகன்: நீ வேற ஏம்மா! எதிர்க்கட்சிகளுக்கு எடுத்துக் கொடுக்கிற . . . காவல்துறை மந்திரியாக இருக்கிற முதல்வர் ஆட்சியில, தமிழகத்தில் சட்டம் ஒழுங்கு சரியில்லைன்னு அந்தம்மா பிரச்சாரம் செய்துக்கிட்டு இருக்கு. இந்த நேரத்தில பிடிச்சாங்க, பறிச்சாங்கன்னு பேசிக்கிட்டு . . . 

ஸ்டாலின்
: சரி ,இந்த பூனைக்கு யாருதான் மணி கட்டுறது?

கலைஞர்: பூனையை யாரு ஏவி விட்டதுன்னே தெரியல! அதுக்குள்ள மணி கட்டுறது . . . மந்திரிச்சு தாயத்து கட்டுறன்னு சொல்லிக்கிட்டு!

(அவசர அவசரமாக ஜெகத்ரட்சகன் வருகிறார்)

ஜெகத்ரட்சகன்: பார்த்தீர்களா தலைவரே . . . இந்த தேர்தல் ஆணையத்தின் ஆணவத்தை?

அன்பழகன்: அதைத்தான் பேசிக் கிட்டு இருக்கிறோம். என்ன செய்யலாம் நீங்க யோசனை இருந்தா சொல்லுங்க . . . 

ஜெகத்ரட்சகன்: ஒரு பெரிய கவியரங்கம் நடத்திரலாம், இப்பத்தான் வைரமுத்து, பா.விஜய் கிட்ட தேதி வாங்கிட்டு வந்தேன்.

துரைமுருகன்: அய்யா பாராட்டு மன்னா! இந்த யோசனையைச் சொல்லித்தான் வாங்கிக் கட்டிக்கிட்டேன். திருப்பி திரியைக் கொளுத்திப் போடாதே.

(கவிஞர் வைரமுத்து மிடுக்குடன் வருகிறார்)

வைரமுத்து: டில்லி எப்போதும் நமக்கு வில்லி. காரிருள் தந்தவர்கள் மீண்டும் காரிருள் தருவது தகுமா? பிழைப்பது தான் நம் முறையா?

துரைமுருகன்: குரேஷிக்கு தமிழ் தெரியுமா எனத்தெரியவில்லை. நல்ல வேளை பிழைத்துக் கொண்டார்.

(ஸ்டாலினுக்குப் போன் வருகிறது)

ஸ்டாலின்: என்னது நடிகர் கார்த்திக் அறிவாலயம் வருகிறாரா? ஏற்கனவே கிணத்த காணோம்ன்ற பார்ட்டிய வைச்சுக்கிட்டு படுற பாடு தாங்கல. . . இதுல்ல வேட்பாளர காணல, தொகுதிய காணல எனச்சொல்றவருட்யேயும் வேற சிக்கணுமா? என பதற

கூடிய கூட்டம் திசைக்கு ஒன்றாக திகைத்து ஓடுகிறது.

கற்பனை: ப.கவிதா குமார்

சந்தேகம் சாமிக்கண்ணு -2



தி.மு.க தலைவர் கருணாநிதி: “தேர்தல் ஆணையத்தில் உத்தமர்கள் வேண்டும்”

ச.சா: ஆட்சியாளர்களில், அமைச்சர்களில் வேண்டாமா?

__________________________________


மத்திய அமைச்சர் ஜி.கே.வாசன்
: “மத்திய அரசு சிறப்புத் திட்டங்களை அள்ளித் தருகிறது”

ச.சா“ஆமாமா, ஒவ்வொண்ணுல்லயும் ஒரு லட்சம் கோடி, ரெண்டு லட்சம் கோடின்னு அடிக்க முடியுது பாருங்க....”

__________________________________



தமிழக பா.ஜ.க முன்னாள் தலைவர் இல.கணேசன்
: “தனிநபர் பற்றிப் பேசும்போது தரம் தாழ்ந்து பேசக் கூடாது”

ச.சா“ஓஹோ, ஒங்கள மாதிரி  முஸ்லீம், கிறித்துவர், தலித்துன்னு பகுதி பகுதியாத்தான் தரம் தாழ்ந்து பேசணுமோ”

__________________________________



மத்திய அமைச்சர் பிரணாப் முகர்ஜி
: “கருத்தொற்றுமை இல்லாததால் லோக்பால் மசோதா நிறைவேற்றப்படவில்லை”

ச.சா: “மகளிருக்கு இட ஒதுக்கீடு, லோக்பால் மசோதா.... இதுக்கெல்லாம் கருத்தொற்றுமை இல்லைன்னு கிடப்புல போட்டுருவீங்க. அமெரிக்காவோட ஒப்பந்தம்னா லஞ்சம் கொடுத்தாவது நிறைவேத்துவீங்க”

மக்களால் தேர்ந்தெடுக்கப்படாத பிரதமர் வாக்களிக்கவும் தவறிவிட்டார்!


அசாம் மாநில சட்டமன்றத் தேர்தலில் தனது வாக்கைப் பதிவுசெய்ய பிரதமர் மன்மோகன் சிங் தவறிவிட்டார்.

அசாமின் திஸ்பூர் தொகுதியில் மன்மோகன்சிங்கும், அவரது மனைவி குர்சரண் கௌரும் வாக்கா ளர்களாக பதிவுசெய்துள்ளனர்.

கடந்த 20 ஆண்டுகளாக அசாமில் இருந்து பிரதமர் மன்மோகன் சிங் மாநிலங்களவை உறுப்பினராக தேர்ந்தெடுக்கப்பட்டு வருகிறார். அப்போதிலிருந்து அவர் அசாமில் வாக்காளராக இருந்து வருகிறார்.

திஸ்பூர் தொகுதிக்கு திங்களன்று நடைபெற்ற தேர்தலில் பிரதமர் மன்மோகன் சிங் தனது வாக்கைப் பதிவு செய்யவில்லை என அந்த தொகுதியின் தேர்தல் அதிகாரியான ஜே.பாலாஜி தெரிவித்தார்.

திஸ்பூர் அரசு மேல்நிலைப்பள்ளியில் வாக்குச் சாவடி எண் 175-ல் வாக்காளர் பட்டியலில் 721-வது பெயராக மன்மோகன் சிங்கின் பெயர் உள்ளது.

அசாம் முன்னாள் முதல்வர் ‘ஹிதேஸ்வர் சைகியாவின் மனைவியும், அசாம் முன்னாள் அமைச்சருமான ஹேமோபிரபா சைகியாவின் வீட்டில்தான் மன்மோகன் சிங் வாடகைக்கு இருப்பதாக பதிவாகி உள்ளது. ஆனாலும் தலைமைச்செயலக வளாகத்துக்கு அருகில் உள்ள அந்த வீட்டில் மன் மோகன்சிங் ஒருபோதும் தங்கியதில்லை. 

தேர்தலில் போட்டியிட்டு மக்களால் தேர்ந்தெடுக்கப்படாமலேயே பிரதமராக நீடிக்கும்மன்மோகன் சிங், தேர்தலில் வாக்களிக்க வேண்டும் என்ற அவசியமான ஜனநாயகக் கடமையையும் நிறைவேற்றத் தவறி யிருப்பது இந்திய மக்களுக்கு இழைக்கப்பட்ட ஒரு அவமானமே!



-தீக்கதிர்

Monday, April 11, 2011

அப்படி போடு!


அவர்கள் சீரியஸாகத்தான் பேசுகிறார்கள்.நமக்குத்தான் சிரிப்பு வருகிறது... :-))))

  • "ஆறாவது முறையாக கலைஞரே முதலமைச்சராக அமர்வார்” தமிழக துணை முதல்வர் ஸ்டாலின், பிரச்சாரத்தில்.


    • வயதானவர்களுக்கெல்லாம் முதல்வர் பதவி தேவையா?” ராகுல் காந்தி கொச்சி பொதுக் கூட்டத்தில்.

      • தி.மு.க அணியில் ஒருவருக்கொருவர் வெற்றிக்கு பாடுபடும் கட்சிகள்தாம் இணைந்துள்ளன” கவிஞர் கனிமொழி, எம்.பி.

        • "ஆளும் கட்சி மீது குறை சொல்வதற்கு வேறு எதுவும் காரணம் கிடைக்கவில்லை என்ற நிலையில், எதிர்க்கட்சியினர் சொல்லக் கூடிய ஒரே குற்றச்சாட்டு விலைவாசி உயர்வுதான். யார் ஆட்சியிலிருந்தாலும், இந்தக் குற்றச்சாட்டினைத்தான் எதிர்க்கட்சியினர் வழக்கமாகக் கூறுவார்கள்” தமிழக முதல்வர் கருணாநிதி.

          • 2ஜி அலைக்கற்றை ஒதுக்கீட்டில் ஊழல் புரிந்தவர்கள் யாராக இருந்தாலும், அவர்கள் தண்டனையிலிருந்து தப்பவே முடியாது”-மத்திய பாதுகாப்பு அமைச்சர் ஏ.கே. அந்தோணி, கொச்சியில் செய்தியாளர்களிடம்.

          • மத்திய தகவல் தொடர்புத்துறை அமைச்சர் ஆ.ராசாவைக் கைது செய்து சிறையில் அடைத்துள்ளதற்காக ஐக்கிய முற்போக்குக் கூட்டணி அரசைப் பாராட்ட வேண்டும்”-மத்திய அமைச்சர் குலாம் நபி ஆசாத் பெங்களூரில் செய்தியாளர்களிடம்.

            • எனவே, நமக்கு வேண்டியதெல்லாம் ஊழல் அற்ற, ஏழைகளின் வாழ்வில் ஒளியேற்றுகிற தி.மு.க ஆட்சிதான் வேண்டுமே தவிர ஊழல் ஆட்சியல்ல!”-திராவிடர் கழகத் தலைவர் கி.வீரமணி (சங்ககிரி பொதுக்கூட்டத்தில்)

              • பா.ஜ.கவுக்கும், ஜனதாக் கட்சிக்கும் கொள்கை வித்தியாசம் எதுவும் இல்லை. எங்கள் கட்சியினர் பத்து பேரை எம் எல் ஏவாக வெற்றி பெறச் செய்தால் தமிழ்நாட்டில் யாரையும் ஊழல் செய்ய விட மாட்டோம்” ஜனதாக் கட்சித்தலைவர் சுப்பிரமணிய சுவாமி

                • இந்தியாவிலேயே மிகப்பெரிய தனியார் மருத்துவமனைகள் இருப்பதும், குறிப்பாக புத்திசாலிகள் அதிகமாக இருப்பதும் தமிழகத்தில்தான்”-தமிழக நிதியமைச்சர் க.அன்பழகன் புதுக்கோட்டை பிரச்சாரக் கூட்டத்தில்.

                  • காங்கிரஸ் கட்சியின் பார்வையில் வளர்ச்சி என்பது ஏழைகள் உள்பட அனைத்துத் தரப்பினரையும் உள்ளடக்கிய வளர்ச்சியே ஆகும்”-காங்கிரஸ் தலைவர் சோனியாகாந்தி (சென்னைப் பிரச்சாரத்தில்)

                    • மத்திய அமைச்சர் மு.க.அழகிரி செல்வாக்கு மிக்கவராக இருக்கிறார். மதுரை மக்களுக்குத் தேவையான நன்மைகளை அவர் செய்து வருகிறார்”-முதல்வர் மு.கருணாநிதி, மதுரை செய்தியாளர்களிடம்.

                      • தமிழகத்தில் தேர்தல் ஆணையத்தின் கெடுபிடி தொடர்கிறது. அதிமுக ஆட்சிக்கு வரவேண்டும் என்று தேர்தல் ஆணையம் செயல்படுகிறது”-மத்திய அமைச்சர்  மு.க.அழகிரி

                        • மதுரை, மத்திய அமைச்சர் மு.க.அழகிரியின் கோட்டை. இங்கு ரௌடிகள், வன்முறைச் செயல்கள் மூலம் கலவரத்தைத் தூண்டிவிடலாம் என்று நினைப்பவர்களின் திட்டம் நடக்காது”-சிரிப்பு நடிகர் வடிவேலு.

                          • நாடு வளர்ச்சியடைய மத்திய அரசும், மாநில அரசும் இணைந்து செயல்பட வேண்டும். அதற்கு மத்தியிலும், மாநிலத்திலும் காங்கிரஸ் ஆட்சி நடக்க வேண்டும்”-ராகுல் காந்தி, புதுச்சேரி பொதுக்கூட்டத்தில்

                          ஏறுது ஏறுது விலைவாசி, எப்படி வாழுறது நீ யோசி!


                          (படத்தை பெரிதாகக் காண படத்தில் கிளிக் செய்யுங்கள்)
                          நன்றி: தீக்கதிர்

                          Sunday, April 10, 2011

                          வந்துவிட்டது களவாணிகள்! மன்மோகன் பிக்சர்ஸ் வெளியீடு!

                          திரைக்கு வந்து சில மாதங்களே ஆன புத்தம் புது....



                          நன்றி : வினவு
                          மறுவெளியீடு: தீக்கதிர்

                          பேருந்தில் பர்ஸ் அடித்தவன் என்ன செய்வான்?



                          நகரப் பேருந்தின் உள்ளே பயணிகள் கூட்ட நெருக்கடியில் திணறிக்கொண்டிருக்கிறார்கள். அப்போது திடீரென ஒரு பயணி அலறுகிறார்: அய்யய்யோ என் பர்ஸைக் காணோம்!


                          அவ்வளவு வியர்வை நெருக்கடியிலும் மற்ற பயணிகள் அவரிடம் பரிவோடு விசா ரிக்கிறார்கள். எவ்வளவு பணம் வைத்திருந்தீர்கள், என்று பரிதாபத்தோடு கேட்கிறார்கள். கவனமாக இருக்கக்கூடாதுங்களா, என்று கரிசனத்தோடு கூறுகிறார்கள்.


                          ஒருவன் குரலை உயர்த்தி, இவன் களுக்கு இதுவே வேலையாயிடுச்சு... கூட்டமா இருக்கிற பஸ்ல ஏற வேண்டியது. ஏமாந்தவன் பர்ஸை அடிச்சிட்டு ஓட வேண்டியது. இந்த பிக்பாக்கெட் ரவுடிகளைக் கட்டுப்படுத்த அரசாங்கமும் ஒண்ணும் செய்ய மாட்டேங்குது, என்கிறார். மவனே, அவன் மட் டும் கையில கிடைச்சான், அவன் கையை முறிக்காம விடமாட்டேன், என்றும் கூறுகிறான். பர்ஸைப் பறிகொடுத்த பயணிக்கு அவன் நிறையவே ஆறுதல் வார்த்தைகள் கூறிவிட்டு, இனிமேலாவது பார்த்து கவனமா இருங்க சார் என்று அறிவுரையும் கூறி விட்டு தன்னுடைய நிறுத்தம் வந்ததும் இறங்கிச் செல்கிறான்.


                          பறிகொடுத்தவர் உட்பட பேருந்தில் உள்ள யாருக்கும் தெரியப்போவதில்லை, பர்ஸை அடித்தவனே அவன்தான் என்று. இப்படிப் பட்டவர்கள் பஸ்சுக்குத் தனியாக வருவதில்லை. குறைந்தது மூன்று பேராக வருவார்கள். குடும்பமாகவே வருவோரும் உண்டு. வேட்டை வியூகம் போல அமைத்துக் கொண்டு, முதல் ஆசாமி தனது பலியாட்டிட மிருந்து பர்ஸ் அல்லது நகையைத் தன் கைக்கு இடம்பெயரச் செய்கிறான். அடுத்த நொடியிலேயே, அப்படி இடம்பெயர்ந்த பொருள் அவன் கையில் இருப்பதில்லை. வியூகத்தின் அடுத்தடுத்த வரிசையில் இருக்கும் கூட்டாளிகளின் கைகளுக்கு அது கண்ணிமைக்கும் நேரத்தில் கடத்தப்பட்டுவிடும். அவர்கள் அடுத்தடுத்த நிறுத்தங்களில் இறங்கி விடுவார்கள். முதலில் பொருளைக் களவாடியவன் யாருக்கும் சந்தேகம் வராமல், பறி கொடுத்தவரிடமே பேச்சுக்கொடுத்தவாறு பேருந்திலேயே சிறிது தொலைவு வந்துவிட்டு இறங்கிப்போய்விடுவான்.


                          நகரப் பேருந்துப் பயணமே தங்களுக்கான போக்குவரத்தாக வாய்க்கப்பட்டவர்கள் யாரும் அநேகமாக இந்த பிக் பாக்கெட் அனு பவத்திலிருந்து விடுபட்டிருக்க முடியாது. அரசியல் பயணத்தில் இன்று தமிழக மக்கள் வேறொரு காட்சியைப் பார்க்கிறார்கள். வரலாறு படைக்கப் புறப்பட்ட இயக்கத்திலிருந்து ஆட்சிபீடம் ஏறியவர்கள், வரலாறு காணாத ஊழல்களில் பிக்பாக்கெட் செய்த பணம்தான், வாக்காளர்களை விலைக்கு வாங்குவதற்காகக் கடத்தப்படுகிறது. அதை மறைக்க ஆணையத்தின் மீது பாய்வது, நல்ல நகைச்சுவையாகவே இருக்கிறது.

                          இரவில் மின் வெட்டு எப்போது வரும், அப்போது மின்சார வேகத்தில் பணம் பட்டுவாடா செய்வதற்கான ஹைடெக் தொழில்நுட்பத்தோடு வீடு வீடாகச் செல்கிறார்கள் என்று மனித உரிமை கண்காணிப்பாளர்கள் தெரிவிக்கிறார்கள். தேர்தல் ஆணையத்தின் மேல் விழுந்து கடித்துக்குதறாத அளவில் அதனைத் திட்டித் தீர்க்கிறார் திமுக தலைவரும் தற்போதைய முதலமைச்சருமான கலைஞர். என்ன கோபம், எதற்காகக் கோபம் என்பதே யாருக்கும் புரியாத வகையில், தேர்தல் ஆணையம் அதிமுக-வுக்கு சாதகமாகச் செயல்படுகிறது என்று குற்றம் சாட்டுகிறார். ஆணையத்தின் எந்த நடவடிக்கை பற்றிப் பொருமுகிறார் என்பதை யாரும் அறிந்துகொள்ள முடியாத வகையில், ஆணையத்தின் செயல்பாடு தமிழகத்தில் அவசரநிலை ஆட்சி போல இருக்கிறது என்று சீறுகிறார்.


                          பிரிந்தவர் கூடினால் பேசவும் வேண் டுமோ என்று கேட்பதைப் பழைய கதையாக்கி விட்டு, கலைஞர் பேசுவதையே தானும் பேசுகிறவராக பாமக தலைவர் ராமதாசு, தன் பங்கிற்கும் தேர்தல் ஆணையம் மீது வசை மாரி பொழிகிறார்.


                          அரசு எந்திரத்தைத் தவறான முறையில் தேர்தல் நோக்கத்திற்குப் பயன்படுத்த இயலாமல் ஆணையம் தடுத்திருக்கிறதே அதைச் சாடுகிறார்களா? ஏகப்பட்ட வாகனங்களைத் தூசுபறக்கக் கொண்டுசென்று வாக்காளர்களை மருட்டவிடாமல் ஆணையம் முட்டுக் கட்டை போட்டிருக்கிறதே அதைத் தாக்குகிறார்களா? தங்களுக்கு ஒத்து வராத மாவட்ட ஆட்சியரை மாற்றுவதற்கு ஆணையம் மறுத்து விட்டதே அதைத்தான் குற்றம் என்கிறார் களா? பணபலத்தைக் காட்டி எங்கும் ஆளுங்கட்சியின் தோரணங்களும் கொடிகளும் விளம்பரங்களுமாய் ஆக்கிரமிப்பதை ஆணையம் தவிர்த்துவிட்டதே அதைத்தான் எதிர்க்கட்சிக்கு சாதகம் என்கிறார்களா? பேருந்தின் பிக்பாக்கெட் பேர்வழி, தன் திருட்டை மறைக்க தானும் சேர்ந்து பர்ஸ் திருடனைத் திட்டுவது போல இல்லையா இது? ஆணையத்தின் அதிரடி நடவடிக்கைகளில் சிக்குவதெல்லாம் ஆளுங்கட்சிக்காரர்கள்,

                          விஞ்ஞானமுறையில் கடத்துகிற பணம் என்று அம்பலமாகிவரும் நிலையில், இப்படி ஆணையத்தைத் திட்டுவதன் மூலம் மக்கள் கவனத்தைத் திசை திருப்ப முயல்வது எப்படி இருக்கிறது தெரியுமா? வடிவேலு பாணியில் சொல்வதானால் சின்னப்புள்ளத் தனமால்ல இருக்கு!


                          தேர்தல் நடத்தை விதிகளை கறாராகச் செயல்படுத்துவதில் மேற்கு வங்க இடது முன்னணி அரசு முழுமையாக ஒத்துழைக்கிறது என்று தலைமைத் தேர்தல் ஆணையரே பாராட்டியிருக்கிறார். தமிழக அரசுக்கும் அப்படிப்பட்ட பாராட்டைப் பெற்றுத் தருவதற்கு மாறாக, இப்படிப்பட்ட தாக்குதல்களில் திமுக தலைமை இறங்குவதைப் பார்க்கையில் வடிவேலு படத்தின் இன்னொரு வசனம்தான் நினைவுக்கு வருகிறது: இவரு அதுக்கு சரிப்பட்டு வரமாட்டாரு.

                          நன்றி: தீக்கதிர்

                          மதுரை: பணம் மற்றும் உருட்டுக்கட்டைகளுடன் திமுகவினர்



                          மதுரையில் வாக்காளர்களுக்கு பணப்பட்டுவாடா செய்த திமுகவி னர் பலர் கைது செய்யப்பட்டுள் ளனர். பணப்பட்டுவாடாவுக்கு பயன்படுத்தப்பட்ட வாகனம், உருட்டுக்கட்டைகள் ஆகியவற்றை காவல்துறையினர் பறிமுதல் செய்தனர்.


                          மதுரை மேற்குத் தொகுதிக்குட்பட்ட பொன்மேனி பகுதியில் உள்ள தானத்தவத்தில் திமுகவி னர் வாக்காளர்களுக்கு பணப்பட்டு வாடா செய்துள்ளனர். இதையறிந்த அதிமுகவினர் அந்த இடத்திற்குச் சென்ற போது, ஒரு காரில் இருந்து சிலர் தப்பியோடி விட்டனர். வாகனத்தில் இருந்தவர்களைக் கைது செய்யக்கோரி அதிமுகவினர் மறியல் செய்தனர்.


                          தேர்தல் பறக் கும்படை அதிகாரிகள் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து விசாரணை நடத்தினர். மதுரை திருநகர் பேரூராட்சி தலைவர் இந்திரா காந்தி உள்ளிட்டோர் பணப்பட்டு வாடாவில் ஈடுபட்டதாக அதிமுகவினர் குற்றம்சாட்டினர். தேர்தல் அதிகாரிகள் கார் ஓட்டுநர் குரு சாமி, வாகனத்தில் இருந்த உசிலம் பட்டியைச்சேர்ந்த திமுகவினர் அண்ணாதுரை, முத்துராமன் ஆகி யோரிடம் விசாரணைநடத்தினர். இதுகுறித்து அதிமுக வட்டச்செயலாளர் மணி எ.எ.காலனி காவல்நிலையத்தில் புகார் செய்தார். இதையடுத்து கார் ஓட்டுநர் குருசாமி, அண்ணாதுரை, முத்துராமன் ஆகியோரை கைது செய்தனர்.


                          அவர்களிடமிருந்த 2900 ரூபாயையும், காரையும் பறிமுதல் செய்தனர். பொன்மேனி பகுதியில் கோவி லில் பணப்பட்டுவாடா நடைபெறுவதாக தேர்தல் பறக்கும் படைக்கு தகவல் கிடைத்தது. இதையடுத்து நேருநகர் காந்தி ரோட்டில் உள்ள காளியம்மன் கோவிலில் ஒருவர், பக்தர்களிடம் பணம் கொடுத்தது விசாரணையில் தெரியவந்தது. இதுகுறித்து காவல்துறையிடம் பறக்கும்படையினர் புகார் தெரிவித் தனர். காவல்துறையினர் அவரைப் பிடித்து விசாரித்த போது, அவர் பெயர் வெங்கட்ராஜ் என்று தெரிய வந்தது. அவரிடமிருந்து 10 ஆயி ரத்து 720 ரூபாயை காவல்துறையினர் பறிமுதல் செய்தனர்.


                          டி.ஆர்.காலனியில் வாக்காளர் களுக்கு திமுகவினர் பணப்பட்டு வாடா செய்வது குறித்து தகவலறிந்த தேர்தல் அதிகாரிகள், அங்கு சென்று விசாரணை நடத்தினர். அப்போது ஜவஹர்புரத்தைச் சேர்ந்த கோவிந் தராஜ்(54), அவரது மகன் சிவ குமார்(30), பழனியைச் சேர்ந்த ராஜா(34) ஆகியோர் வாக்காளர் களுக்கு வாக்கிற்கு 100 ரூபாய் வீதம் பட்டுவாடா செய்து திமுகவிற்கு வாக்களிக்கச் சொன்னது தெரியவந்தது. அவர்களை தல்லா குளம் காவல்துறையினர் கைது செய்தனர்.


                          கிழக்குத் தொகுதிக்குட்பட்ட வண்டியூர் மாந்தோப்பு பகுதியில் திமுக வேட்பாளர் பெ.மூர்த்தியின் ஆலோசனையின் பேரில் திமுக வைச் சேர்ந்த ராஜா, உசேன் ஆகியோர் ரூ.7,600 மதிப்பிலான பணக்கவர்களை எடுத்துக் கொண்டு வாக்காளர்களுக்கு கொடுத்துக் கொண்டிருந்தனர். அதிமுகவைச் சேர்ந்த ராஜன், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியைச் சேர்ந்த சமம், ஞானவேல். தமிழ்ராஜ் ஆகியோர் தேர்தல் அதிகாரிகளுக்கு தகவல் கொடுத்தனர். திமுகவைச் சேர்ந்த இருவர் மீதும் கருப்பாயூரணி காவல் நிலையத்தில் புகார் அளிக்கப்பட்டுள்ளது.


                          16 வது வார்டு மேலத் தோப்பு பகுதியில் வாக்காளர்களுக்குப் பணப்பட்டுவாடா செய்த திமுகவினர் இருவரை மார்க்சிட் கம்யூனிட் கட்சியினர் பிடித்து செல்லூர் காவல்நிலையத்தில் ஒப்படைத்தனர். விசாரணையில் பணப்பட்டுவாடா செய்தது பரமன், பிரசாந்த் எனத்தெரியவந்தது. அவர்களிடமிருந்து 800 ரூபாய் பறிமுதல் செய்யப்பட்டது.


                          மதுரை விவநாதநகர் அண் ணாதெருவில் வாக்காளர்களுக்குப் பணம் கொடுத்த அப்பகுதி யைச் சேர்ந்த நீலகண்டன்(21) என்பவரை காவல்துறையினர் கைது செய்தனர். அவரிடம் விசாரணை நடத்திய போது, அப்பகுதி யில் உள்ள 8 வீடுகளுக்கு 28 வாக்காளர்களுக்கு தலா 100 வீதம் 2800 ரூபாய் பணப்பட்டுவாடா செய்ததாகக் கூறினார். இதைய டுத்து தேர்தல் அதிகாரிகள் முன்னிலையில் பணம்பட்டுவாடா செய்யப்பட்ட வீடுகளில் விசாரணை நடத்தி 2800 ரூபாயை காவல்துறையினர் பறிமுதல் செய் தனர். இதுகுறித்து வாக்காளர்களி டம் விசாரணை நடத்திய போது, பணம் வாங்காவிட்டால், எதிர்கட்சிக்காரர்கள் எனப் பிரச்சனை செய்வார்கள் என்று பயந்து வாங்கினோம் எனக்கூறினர். அவர்களை காவல்துறையினர் எச்சரித்து விட்டுவிட்டனர். நீலகண்டனிடம் இருந்த 200 ரூபாயையும் பறிமுதல் செய்தனர்.


                          பந்தடி 7வது தெருவில் பணப்பட்டுவாடா செய்த இலியா(21) என்ற திமுகவைச் சேர்ந்தவரை காவல்துறையிடம் மார்க்சிட் கம்யூனிட் கட்சியினர் பிடித்து ஒப்படைத்தனர். அவரிடமிருந்து 2800 ரூபாயை தெற்குவாசல் காவல்துறையினர் பறிமுதல் செய்தனர்.

                          Friday, April 8, 2011

                          வாக்காளர்களுக்கு லஞ்சம் கொடுத்த திமுகவினர் கைது!

                          மதுரையில் பல்வேறு இடங்களில் வாக்காளர் களுக்குப் பணப்பட்டுவாடா செய்த திமுகவினர் கைது செய்யப்பட்டுள்ளனர்.

                          மதுரை தெற்குத் தொகுதிக்குட்பட்ட தெற்குவெளி வீதி தில்லைநாயகம் தெரு வைச் சேர்ந்தவர் சுந்தர்(38). திமுக 43 வது வார்டு இளை ஞரணி துணைச்செயலாள ராக உள்ளார். இவர் அப் பகுதியில் வாக்காளர்களுக் குப் பணப்பட்டுவாடா செய்து கொண்டிருந்தார். அப்போது அங்கு வந்த பார் வர்ட் பிளாக் இளைஞரணி செயலாளர் பிச்சை, சுந்த ரைப் பிடித்து தெற்குவாசல் காவல்நிலையத்தில் ஒப்ப டைத்தார். அவரிடமிருந்து 17 ஆயிரத்து 310 ரூபாயை பறிமுதல் செய்த காவல் துறையினர் சுந்தரை கைது செய்தனர்.

                          மதுரை சுந்தராஜபுரம் பகுதியில் திமுகவைச் சேர்ந்த ஜெகதீசன் என்பவர் வாக்கா ளர்களுக்கு பணப்பட்டுவாடா செய்து கொண்டிருந்தார். தேர்தல் துணைக்கண்கா ணிப்பாளர் ஜெயராமன், வாக்காளர் ஜாவீதா ஆகி யவற்றுடன் ஜெகதீசனைப் பிடித்து ஜெய்ஹிந்த்புரம் காவல்நிலையத்தில் ஒப்ப டைத்தார். அவர்கள் ஜெக தீசனை கைது செய்து விசா ரணை நடத்தி வருகின்றனர்.

                          மதுரை மாடக்குளம் அம்பேத்கர் சிலை அருகில் ஒரு வேனில் வாக்காளர்க ளுக்குப் பணப்பட்டுவாடா செய்வதாக தேர்தல் அதி காரிகளுக்கு தகவல் கிடைத் தது. அங்கு சென்ற தேர்தல் கண்காணிப்பாளர் ஜெய சிங் ஞானதுரை, வாக்காளர் களுக்குப் பணம் பட்டு வாடா செய்து கொண்டி ருந்த 69 வது வார்டு திமுக துணைச்செயலாளர் பரம சிவம் என்பவரைப் பிடித்து சுப்ரமணியபுரம் காவல் நிலையத்தில் ஒப்படைத் தார். பரமசிவத்திடமிருந்து வாக்காளர்களுக்கு தருவதற் காக வைத்திருந்த 4900 ரூபா யை பறிமுதல் செய்த காவல் துறையினர், அவரைக் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

                          மதுரை கோகுல்நகர் குறிஞ்சி தெருவில் திமுக வைச் சேர்ந்த ஜெகதீசன் என்பவர் வாக்காளர்களுக் குப் பணப்பட்டுவாடா செய்து கொண்டிருந்தார். இதுகுறித்து தகவல் அறிந்த தேர்தல் கண்காணிப்பாளர் ஜெயசிங் ஞானதுரை அவ ரைப் பிடித்து சுப்ரமணிய புரம் காவல்நிலையத்தில் ஒப்படைத்தார். ஜெகதீ சனை கைது செய்து அவரி டமிருந்து 7260 ரூபாயை காவல்துறையினர் பறிமுதல் செய்தனர்.

                          மேலூர்

                          மேலூர் தாலுகா பதி னெட்டாங்குடியைச் சேர்ந் தவர் ராமசாமி. இவரது மகன் ராமமூர்த்தி. திமுக கிளைச்செயலாளராக பொறுப்பு வகிக்கும் இவர், திமுக வேட்பாளர் ராணி கொடுத்த ஆலோசனையின் அடிப்படையில் 500 ரூபாய் நோட்டுகள் 35ஆயிரத்தை எடுத்துக்கொண்டு பணப் பட்டுவாடாவிற்கு புறப்பட் டார். 500 ரூபாய் நோட்டு களை 100 ரூபாய்களாக மாற்றுவதற்காக கொட் டாம்பட்டி-சிங்கம்புணரி சாலையில் உள்ள ஒரு பெட் ரோல் நிரப்பும் நிலையத்திற்கு சென்று சில்லரை மாற்றி யுள்ளார். இது பற்றிய தக வல் கிடைத்தவுடன் விரைந்து சென்ற தேர்தல் அதிகாரிகள் ராமமூர்த்தி மீது வழக்கு பதிவு செய்து கைது செய் தனர். பின் அவர் ரிமாண்ட் செய் யப்பட்டார்.

                          எழுமலை


                          எழுமலை மேற்கு தெரு வில் வாக்காளர்களுக்கு பணம் பட்டுவாடா செய்ய முயன்ற தி.மு.க.,வை சேர்ந்த குருசாமி, செல்லபாண்டி, ஜெயபாலை பொதுமக்கள் போலீசில் ஒப்படைத்தனர். மூன்று பேரையும் எழு மலை இன்ஸ்பெக்டர் தின கரன், எஸ்.ஐ.,பாஸ்கரன் கைது செய்தனர். 3000 ரூபா யை பறிமுதல் செய்தனர்.

                          ‘இவன் இதுக்கு சரிப்பட்டு வரமாட்டான்...!!’


                          பிரச்சாரத்திற்கு மேக்-அப்போடு கிளம்பிய வடிவேலு, வேனில் ஏறுவதற்காக காலை எடுத்து வைத்த போது தான் அந்தப் பேச்சுச் சத்தம் கேட்டது.

                          “இவன் இதுக்கு சரிப்பட்டு வரமாட்டான்...”ன்னு திமுக துண்டைத் தோளில் போட்டுக் கொண்டி ருந்தவர் கிசுகிசுத்துக் கொண்டிருந் தார். வடிவேலுவுக்கு தாங்க முடியவில்லை. வைத்த காலை பின்னுக்கு இழுத்தவர், அவர்க ளுக்கு அருகில் வேகமாகப் போய் நின்றார். 

                          “ஆமா.. என்ன சொன் னீங்க...”

                          அவர்களில் ஒருவர், “அதெல்லாம் ஒண்ணுமில்ல தம்பி” என்றார்.

                          “இல்லை... ஏதோ... இவன் இதுக்கெல்லாம் சரிப்பட்டு வர மாட்டான்... அப்படினு சொன்னீங்களே... எதுக்கு...”

                          “விடுங்க, தம்பி. கிளம்புங்க...”

                          “இல்லை. அது என்னன்னு நான் தெரிஞ்சுக்கணும்...”

                          “வேண்டாம் தம்பி. அதுக்கெல்லாம் நீங்க சரிப்பட்டு வரமாட்டீங்க..”

                          (ஆவேசமான வடிவேலு) “ஏங்க என்னன்னு சொல்லாம இப்புடி மொட்டைக் கட்டையா சொன்னா எப்புடி..”

                          “அதான் சொன்னோமுல்ல தம்பி... நீங்க சரிப்பட்டு வரமாட்டீங்கன்னு...”

                          “ஏன்யா... ஊரே நாறிப்போய்க்கிடக்கு... ஊழல் அமவுண்ட் ரெண்டு லட்சம் கோடியத் தொடுதுங்குறாங்க... இருந்தாலும் ரெண்டு ஜோக்கச் சொல்லி சிரிக்க வெச்சு திசை திருப்பலாம்னு கிளம்பிருக்கேன்.. இப்புடி பொசுக்குனு இவன் சரிப்பட்டு வரமாட்டான்னு சொல்லிட்டா எப்புடி...”

                          “தம்பி... சொன்னா கேளுங்க... நீங்க அதுக்கெல்லாம் சரிப்பட்டு வரமாட்டீங்க...”

                          “யோவ்... என்னய்யா சின்னப்புள்ளைத் தனமா இருக்கு... புள்ள குட்டியெலாம் படிக்க முடியாம கரண்ட் கட் பண்ணி வெச்சுருக்கீங்கன்னு ஜனங்கள்லாம் குமுறிக்கிட்டு இருக்காங்க.. எனக்காவது சினிமா நடிகன்னு கூட்டம் கூடிருறாங்க... உங்களுக்குக் கூடுற கூட்டத்துல பாதிக்கும் மேல கரண்ட் இல்லாம வீட்டுல உக்கார முடியாத கூட்டம்தான்... ஒரு ரூபாய்க்கு அரிசி வாங்கிட்டு, தொட்டுக்க ஊறுகாய் கூட வாங்க முடியாம அலர்றாங்க... குடும்ப ஆட்சி மாறி குடும்பம்தான் ஆட்சியாயிருக்கு... நேர்மையான அதிகாரிங்களுக்குலாம் அடி, உதை விழுந்துக்கிட்டு இருக்கு... “

                          அதுவரை அமைதியாக இருந்த மற்றவர், “விடுங்க தம்பி. நீங்க பிரச்சாரத்துக்குக் கிளம்புங்க...”

                          “எதுக்கு சரிப்பட்டு வரமாட்டேன்னு எனக்குத் தெரியணும். தெரியாம நகர மாட்டேன்..”

                          “தம்பி... தம்பி... நீங்க அதுக்கெல்லாம் சரிப்பட்டு வர மாட்டீங்க... போங்க...”

                          “யோவ்... ரெண்டு வாரத்துக்கு முன்னால நீங்க காங்கிரஸ் வேட்டியையும், அவங்க உங்க வேட்டியையும் உருவுன காட்சிய மக்கள்கிட்டருந்து மறைக்க பாட்டெல்லாம் பாடி ஓட்டுக் கேக்கறன்யா... வற்றாத ஜீவநதி தாமிரபரணிய வத்தலும், தொத்தலுமா மாத்திட்டீங்க... படிச்சவன்லாம் திமுகவுக்குத்தான் போடுவான்னு முந்தி பெருமையாச் சொல்லிக்குவீங்களே.. அதுவும் போச்சு... அதனால இப்ப பாமர மக்கள ஏமாத்தத்தான என்ன இறக்கிவுட்டுருக்கீங்க... அப்படியிருக்குறப்ப எதுக்குய்யா நான் சரிப்பட்டு வர மாட்டேன்னு சொல்றீங்க...”

                          தொகுதிப் பொறுப்பாளர் வருகிறார்.

                          “என்ன, பிரச்சார வேன்ல ஏறாம இங்க நின்னு பேசிட்டுருக்கீங்களே...”

                          “இவங்க என்ன சொன்னாங்கன்னு கேட்டுச் சொல்லுங்க... அப்புறமா நான் வேன்ல ஏர்றேன்...”

                          அவர்களைப் பார்த்து, “நீங்க என்ன சொன்னீங்க...” என்கிறார் பொறுப்பாளர்.

                          “இல்லீங்க... இவர் சரிப்பட்டு வர மாட்டார்...”

                          கொந்தளித்தார் வடிவேலு. “பாத்தீங்களா... பாத்தீங்களா.. இப்புடித்தான் ரொம்ப நேரமா பேசிட்டுருக்காங்க...”

                          இருவரும் பொறுப்பாளர் காதில் கிசு கிசுக்கிறார்கள்.

                          வடிவேலு பக்கம் திரும்பிய பொறுப் பாளர், “வாங்க நாம கிளம்பலாம்” என்றார்.

                          “இவங்க என்ன சொன்னாங்கன்னு...” என்று இழுத்தார் வடிவேலு.

                          “அப்புறம் பாத்துக்கலாம். முதல்ல வாங்க. அதுக்கெல்லாம் நீங்க சரிப்பட்டு வர மாட்டீங்க...” என்றார்.

                          அலறியே விட்டார் வடிவேலு. 

                          “ஏன்யா.. உங்க தகிடுதத்த வேலை யெல்லாம் மறைக்க எப்புடியெல்லாம் பொய்ப் பிரச்சாரம் பண்ணிட்டு வர்றேன். என்னன்னு சொல்லாமயே இப்புடி சரிப்பட்டு வரமாட்டான்... சரிப்பட்டு வரமாட்டான்னு சொல்லிட்டே இருக்கீங்களே..” என்று தழுதழுத்தவாறு வேனில் ஏறுகிறார் வடிவேலு.

                          மைக்கைப் பிடித்த வடிவேலு, “நான் எதுக்கு சரிப்பட்டு வரமாட்டேன்னு நீங்களாவது சொல்லுங்களேன்...” என்று பேச ஆரம்பித்தார். 

                          அய்யய்யோ... இவன் இதுக்கும் சரிப்பட்டு வரலையே என்று அலறினர் திமுகவினர்.

                          கற்பனை : கணேஷ்



                          நன்றி : தீக்கதிர்

                          Thursday, April 7, 2011

                          சந்தேகம் சாமிக்கண்ணு -1



                          "கள்ள ஓட்டு போட்டால் ஓராண்டு சிறைத்தண்டனை" - தமிழகத் தலைமை தேர்தல் அலுவலர் பிரவீண் குமார்.

                          ச.சா - யோசிக்காம திமுகவுக்கு ஓட்டுப்போட்டா அஞ்சு வருஷம் தண்டனை கிடைக்குமே...??

                          * * *


                          "ஏழைகளுக்கு நலத்திட்டங்கள் தொடர மீண்டும் திமுக ஆட்சி வேண்டும்" - காங்கிரஸ் தலைவர் சோனியா காந்தி.

                          ச.சா - அப்படிச் சொல்லும்போது சிறையில வாடுற ஆ.ராசாங்குற ஏழையும் நினைவுக்கு வந்துருப்பாரே...

                          * * *



                          "மத்திய, மாநில(தமிழக) அரசுகள் இணக்கமாக செயல்பட்டு வருகின்றன " - மத்திய அமைச்சர் ஜி.கே.வாசன்.

                          ச.சா - ஸ்பெக்ட்ரம் விவகாரத்துல முழுமையான குற்றப்பத்திரிகை வரலை... இதுலருந்தே புரிஞ்சுக் கலாமே...?

                          * * *


                          "கலைஞர் வீடு வழங்கும் திட்டம் இந்தியாவில் வேறு எங்கும் இல்லை" - துணை முதல்வர் மு.க.ஸ்டாலின்.

                          ச.சா - மேற்கு வங்கம், கேரளாவுலயும் ஏழைகளுக்கு வீடு வழங்குற திட்டம் இருக்கு... அதுக்கெல்லாம் கலைஞர் பெயரா வைக்க முடியும்...??

                          நன்றி: தீக்கதிர்



                          இன்று தீக்கதிரில்:-

                          மு.க.அழகிரிக்கு மதுரைவாசியின் மனம் திறந்த மடல்!


                          அன்புமிக்க மாண்புமிகு உரம் மற்றும் இரசாயனத்துறை அமைச்சர், மன்னிக்கவும்... உங்களுக்கு இப்படியெல்லாம் அழைத்தால் பிடிக்காதல்லவா! உங்களுக்குப்பிடித்த மாதிரியே அழைக்கிறேன். அன்புமிக்க அஞ்சாநெஞ்சன் மு.க.அழகிரி அவர்களுக்கு,


                          ஒரு சாதாரண இந்தியக் குடிமகன், மதுரையில் பிறந்தது முதல் வசிக்கும் மதுரைவாசி எழுதிக்கொள்வது, உங்களது தொடர்ச்சியான நடவடிக்கைகளால் நாங்கள் இவ்விடம் நலமல்ல... (எங்கள் நலம் பற்றி உங்களுக்கு என்ன அக்கறை) நீங்கள் அவ்விடம் நலமா?


                          எனக்கு நன்கு ஞாபகம் இருக்கிறது. 30 வருடங்களுக்கு முன்பு, நான் இளைஞனாக இருந்தபோது, மதுரைத் தெருக்களில், நண்பர்களுடன் அவர்கள் கைகளில் கிரிக்கெட் பேட்டுடன் உலா வந்த அழகிரியை இன்னும் எனக்கு ஞாபகம் இருக்கிறது. இன்றைக்கும் நீங்கள் நண்பர்களுடன்தான் வருகிறீர்கள். ஆனால் அவர்கள் கைகளில் கிரிக்கெட் பேட்டிற்கு பதில் வேறு ஏதோ இருக்கிறது.


                          மதுரை மக்களுக்கு, பன்னெடுங்காலமாக ஒரு வழக்கம் இருக்கிறது. தங்களை ஆட்சிபுரிந்த மன்னர்களானாலும் சரி, மக்களாட்சியின் அரசியல் தலைவர்களானாலும் சரி, அவர்கள் பூர்வீக மதுரை மைந்தர்களா அல்லது குடியேறியவர்களா என எண்ணிப்பார்ப்பது கிடையாது. தங்கள் தலைகளில் வைத்து ஆனந்தக்கூத்தாடுவார்கள்... அவர்கள் மக்களுக்கு நல்லது செய்யும் வரையிலும்! எங்களுக்கு சூது, வாது செய்யத் தெரியாது, மனதில் பட்டதை பட்டென சொல்லித்தான் பழக்கம்.

                          சமீபத்தில் நீங்கள் விடுத்த அறிக்கை எங்களுக்கு ஒரு பக்கம் சிரிப்பும், மறுபக்கம் எங்களை இப்படி கொலைகாரர்களாக... கொள்ளைக்காரர்களாக சித்தரித்ததைப்பற்றி கோபமும் ஒரு சேர வருகிறது. என்ன புரியவில்லையா.. அஞ்சாநெஞ்சரே, உங்கள் வீட்டுத் தோட்டத்தில் காவல்காத்துக்கொண்டிருந்த அதிகப்படியான போலீகாரர்களை திரும்பப் பெற்றுக்கொண்டது சரிதானே... அவர்களுக்கு தேர்தல் சமயத்தில் வேறுபணிகள் தரலாம் தானே... ஆனால் எங்களால் (மதுரை மக்களால்) உங்களது உயிருக்கும் உடைமைக்கும் ஆபத்து ஏற்பட்டால்... என்று என்றைக்கு அறிக்கை விட்டீரோ அன்றைக்கே எங்களது நெஞ்சம் வெடித்துச் சிதறியது.


                          உங்களது குடும்பத்தினரால் எடுக்கப்படும் சினிமாவினால்தான் மதுரை கலவர பூமியாக சித்தரிக்கப்படுகிறது. உண்மையில் மதுரை அமைதிப்பூங்காதான்! அஹிம்சையை போதித்த மகாத்மா, உண்ண உணவில்லாத, உடுக்க உடையில்லாத இந்திய மக்களின் வாழ்க்கை நிலையை நினைத்து நெஞ்சம் உருகி, தன் மேலாடையை கழற்றி எறிந்து அரை நிர்வாணக் கோலத்தை பூண்ட புண்ணிய பூமி மதுரை. ஆனால் இன்று, உங்களது நண்பர்கள் சகிதமாக, நீங்கள் கட்டவிழ்த்து விடுகின்ற வன்முறை எங்கள் மனதில் ஆழமான காயத்தை ஏற்படுத்தி உள்ளது.


                          உங்களுக்கும், உங்களது உறவினர் தயாநிதி மாறனுக்கும் இடையிலான பிரச்சனையில் எறிந்து சாம்பலானது எங்களது மதுரையின் தொழிலாளர்கள் மூன்று பேர். உலகமே இந்த கொடூரக் காட்சிகளை கலாநிதி மாறனின் தொலைக்காட்சி மூலமாக பார்த்தது. ஆனால் நீதிமன்றத்திற்கு மட்டும் சாட்சிகள் இல்லை. உங்களது ஆதரவாளர்களால் எரிக்கப்பட்ட அந்த மூன்று தொழிலாளர்களின் சாம்பலின் மேல் நின்று நீங்களும், தயாநிதி மாறனும் இன்று ஓட்டு கேட்கிறீர்கள்.


                          தேர்தல் ஆணையத்தின் தயவால் நாங்கள், மதுரைவாசிகள், சற்று நிம்மதியாக மூச்சுவிட முடிகிறது. மதுரையில் உள்ள தெருக்கள் முழுவதும் கடந்த ஐந்து வருடங்களாக நீங்களும் உங்கள் மனைவியும், உங்கள் குழந்தைகளும் மிகப்பெரிய பேனர்களாக தொங்கிக்கொண்டு, எங்களது மூச்சுக்காற்றினை முட்டிக் கொண்டிருந்தீர்கள். தெருவெங்கும் தொங்கிக்கொண்டிருந்த நீங்கள், எங்கள் மனதுக்குள் புகும் கலையை மட்டும் கற்க மறுத்துவிட்டீர்கள்.


                          இந்த மதுரை மாநகரத்திலே பி.ராமமூர்த்தி, ஜானகியம்மாள், சங்கரய்யா, கே.டி.கே.தங்கமணி, எங்களோடு ஒருவராக வாழ்ந்து மறைந்த பி.மோகன், தோளோடு தோள் உரசிக்கொண்டு எங்களோடு ஒன் பை டூ டீ சாப்பிடும் நன்மாறன் இவர்களின் வீடுகளுக்கோ, அல்லது இவர்களுக்கோ எத்தனை போலீகாரர்கள் காவலுக்கு இருந்தார்கள் என்று உங்களுக்குத் தெரியுமா?


                          நாங்கள் மதுரை மாவட்ட ஆட்சியரையும், தேர்தல் ஆணையரையும் வேண்டுவதெல்லாம், தேர்தல் அன்று நேர்மையான வன்முறையற்ற வகையில் வாக்களிக்க எங்களுக்கு பாதுகாப்பு தேவை என்பதுதான்.


                          என்ன வேதனை பார்த்தீர்களா அஞ்சாநெஞ்சரே, இந்த கோரிக்கையைக் கூட உங்களிடம் எங்களுக்கு வைக்கத் தோன்றவில்லை! நீங்கள் எங்கள் தொகுதியில் தேர்ந்தெடுக்கப்பட்ட மத்திய மந்திரி!

                          இந்தக்கடிதத்தை முடிப்பதற்கு முன் உங்களுக்கு ஒன்று மட்டும் சொல்லிக் கொள்ள ஆசைப்படுகிறேன். மதுரை மக்கள் என்றைக்குமே பாசத்துக்குக் கட்டுப்பட்டவர்கள்! (பாசக்காரர்கள்) அவர்களை உங்கள் அராஜகத்தாலோ அக்கிரமத்தாலோ கட்டுப்படுத்த முடியாது. எங்களை பணத்தால் விலைக்கு வாங்கவும் முடியாது.


                          வாழ்த்துக்களுடன்.
                          ஏப்ரல் 13க்காக காத்திருக்கும் மதுரைவாசி


                          (தீக்கதிர் செய்திகளை முழுமையாக வாசிக்க.....)

                          இன்று:-

                          திமுகவை ஏன் தோற்கடிக்க வேண்டும்?
                          கோவையின் முகத்தை சிதைத்த திமுக அரசு!
                          கலைஞர் சொன்னதும்... சோனியாகாந்தி சொல்லாததும்!
                          ஈயத்தைப் பார்த்து இளிக்கும் பித்தளை
                          கார்ட்டூன் (7.4.2011)
                          விலை உயர்வு, ஊழலுக்கு எதிரான அலை திமுக-காங். அணியை வீழ்த்தும் !-பிராகாஷ் காரத் பேட்டி

                          Wednesday, April 6, 2011

                          ஆம்னி பேருந்தில் ரூ.5 கோடி திமுகவினரின் தில்லுமுல்லு அம்பலம்! அமைச்சர் நேரு உறவினர் பணம் கடத்தல்!!




                          தோல்வி உறுதி என்ற நிலையில் வாக்காளர்களுக்கு பணத்தை கொடுத்தாவது வெற்றி பெறலாம் என்ற நினைப்பில் திமுக பல்வேறு தில்லுமுல்லு வேலைகளில் ஈடுபட்டுள்ளது.

                          பணப்பட்டுவாடா என்ற ஜனநாயகப் படுகொலையை திமுக அரங்கேற்றி வரும் நிலையில், தமிழக போக்குவரத் துத்துறை அமைச்சர் கே.என்.நேரு வின் உறவினர் என்று கூறப்பட்ட உதய குமார் என்பவருக்குச் சொந்தமான ஆம்னி பேருந்திலிருந்து 5கோடி ரூபாய் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது. வாக்காளர்களுக்கு பட்டுவாடா செய்ய கொண்டு செல்லப்பட்ட பணமா என தேர்தல் அதிகாரிகள் விசாரணை நடத்தி வரு கின்றனர்.

                          சென்னையிலிருந்து திருச்சிக்கு வரும் ஆம்னி பேருந்தில் ரூ.5 கோடி பணம் உள்ளதாக திருச்சி கோட்டாட்சியரும், திருச்சி மேற்கு தொகுதி தேர் தல் நடத்தும் அலுவலருமான சங்கீதா விற்கு திங்களன்று நள்ளிரவு தகவல் கிடைத்தது. இதையடுத்து செவ்வாய் அதிகாலை 3மணியளவில் திருச்சி-திண்டுக்கல் சாலையில் பொன்னகர் அருகே நிறுத்தி வைக்கப்பட்டிருந்த தனியார் பேருந்தை சங்கீதா அதிரடியாக சோதனையிட்டார். அப்போது பேருந்தின் மேற்கூரையில் 5 பெரிய டிராவல்ஸ் பேக்குகள் படுதா போட்டு மூடப்பட்டிருந்தது. படுதாவை விலக்கி சோதனையிட்ட போது அவற்றில் ரூ.5 கோடியே 15லட்சத்து 27ஆயிரம் இருப்பதை சங்கீதா கண்டறிந்தார். அப்போது அங்கிருந்த ஆம்னி பஸ்டிரைவர் திடீரென ஓட்டம் பிடித்தார்.

                          இதுகுறித்து தேர்தல் அலுவலர் சங் கீதா உயர்அதிகாரிகளுக்கு தகவல் அளித்தார். இதையடுத்து தேர்தல் அலுவலர்கள் பணத்தை கைப்பற்றி வரு மானவரித் துறையினரிடம் ஒப்படைத் தனர்.

                          இதுகுறித்த விசாரணையில் பேருந்தின் உரிமையாளர் அதே பகுதியை சேர்ந்த உதயகுமார் என்பது தெரியவந்தது. அவரது வீட்டிலும் வருமானவரித் துறையினர் சோதனை நடத்தினர். உதயகுமாரையும் அவரது மேலாளர் பாலு வையும் விசாரணைக்காக அழைத்துச் சென்றனர். பஸ்உரிமையாளர் உதய குமார் அமைச்சர் நேருவிற்கு உறவினர் என்று கூறப்படுகிறது.

                          இது தமிழகம் முழுவதும் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

                          மதுரையில் ரூ.20லட்சம்

                          மதுரை மாவட்டத்தில் உள்ள பஞ்சா யத்து யூனியன் அலுவலகம் ஒன்றில் பணியாற்றுபவர் எம்.ராஜ்குமார். திருமங் கலம் சௌடார்பட்டி அருகேயுள்ள மீனாட்சிபுரத்தைச் சேர்ந்த இவரிடமிருந்து 1லட்சத்து 29ஆயிரத்து 500 ரூபாயை அதிகாரிகள் பறிமுதல் செய் துள்ளனர். இந்தப் பணம் நிலம் வாங்க வைத்திருந்தது என ராஜ்குமார் தெரிவித் துள்ளார். ஆனால் அதிகாரிகள் ஏற்க மறுத்துவிட்டனர். தேர்தல் நேரத்தில் திமுகவினர் பணப்பட்டுவாடா செய்து வரும் நிலையில் பணம் கருவூலத்தில் ஒப்படைக்கப்பட்டது. தொடர்ந்து விசாரணை நடைபெற்றுவருகிறது.

                          மதுரை மேற்குத் தொகுதியில் போட் டியிடும் திமுக மாவட்டச்செயலாளர் கோ.தளபதியின் தோல்வி உறுதியாகி விட்ட நிலையில் இத் தொகுதியில் பணப்பட்டுவாடா செய்யப்பட்டது. இதில் கூடல்நகர் என்ற இடத்தில் ரூ.20 லட்சமும், பரவை பகுதியில் ரூ.10 ஆயிரமும் பறிமுதல் செய்யப்பட்டது. மூவர் கைது செய்யப்பட்டனர்.

                          மதுரை திருமங்கலத்தில் போட்டியி டும் திமுக வேட்பாளர் மணிமாறனுக்கு ஆதரவாக பணப்பட்டுவாடா செய்த திருமங்கலம் சின்னசெங்குளத்தைச் சேர்ந்த பாண்டி என்பவரிடமிருந்து ரூ.62ஆயிரத்து 200 கைப்பற்றப்பட்டது.

                          கமுதி டீக்கடையில் ரூ.40 லட்சம்

                          முதுகுளத்தூர் தொகுதியில் திமுக. சார்பில் சத்தியமூர்த்தி போட்டியிடுகி றார். பெருநாழியைச் சேர்ந்தவர் பாண்டி. இவர் அப்பகுதியில் டீக்கடை நடத்தி வருகிறார். இவரது டீ கடையில் ரூ.40 லட்சம் பறிமுதல் செய்யப்பட்டது.

                          தர்மபுரியில் ரூ.9 லட்சம்

                          தர்மபுரி மாவட்டம் கடகத்தூரைச் சேர்ந்த திமுக கிளைச் செயலாளர் சேட்டு என்பவர் வாக்காளர்களுக்கு பணப்பட்டுவாடா செய்ய வைத்திருந்த ஒரு லட்சத்து 90ஆயிரம் ரூபாயையும், ஏ.கொள்ளஹள்ளியைச் சேர்ந்த திமுக கிளைச்செயலாளர் ஜனார்த்தனன் தனது வீட்டில் பதுக்கி வைத்து வாக்கா ளர்களுக்கு கொடுக்கவிருந்த 8லட்சம் ரூபாயையும் காவல்துறையினர் பறி முதல் செய்தனர்.

                          திமுக பிரமுகரை தப்பவிட்ட போலீஸ்

                          விழுப்புரத்தை அடுத்துள்ள சிறுவந் தாடு கிராமத்தில் திமுகவினர் நள்ளிர வில் வாக்காளர்களுக்கு பணம் கொடுப் பதாகக் கிடைத்த தகவலின் பேரில் காவல்துறையினர் சோதனை செய்த னர். இதில் 500 ரூபாய் நோட்டுக் கட் டுக்கள் அடங்கிய ரூ.2.5லட்சத்தை பறி முதல் செய்தனர். பிடிபட்ட நபரை தப்ப விட்ட காவல்துறையினர் பணத்தை மட்டும் தேர்தல் அதிகாரியிடம் ஒப்ப டைத்துள்ளனர். காவல்துறை தப்பவிட் டவரின் பெயர் மோகன் என்றும் அவர் திமுகவைச் சேர்ந்தவர் என்றும் தெரிய வந்தது. பணத்தை பறிமுதல் செய்து விட்டு, திமுக பிரமுகரை தப்பவிட்ட காவல்துறையினரை தேர்தல் அதிகாரி பிரியா கடுமையாக எச்சரித்தார். சம்பந் தப்பட்ட நபரை பிடித்து வரவேண்டு மெனவும் அவர் உத்தரவிட்டார்.

                          புதுக்கோட்டை

                          புதுக்கோட்டை மாவட்டம் அரிம ளம் ஊராட்சி ஒன்றியக் குழுத் தலை வராக இருப்பவர் பொன். ராமலிங்கம். இவரது வீட்டில் வாக்காளர்களுக்கு கொடுப்பதற்காக பணம் பதுக்கி வைக்கப்பட்டுள்ளதாக தேர்தல் ஆணையத்திற்குத் தகவல் வந்தது.

                          இத்தகவலையடுத்து திருமயம் தொகுதி தேர்தல் நடத்தும் அலுவலர் சசிகலா தலைமையில் வருமான வரித் துறையினர், வருவாய்த் துறையினர் மற் றும் பறக்கும் படையினர் பொன்.ராம லிங்கம் வீட்டில் சோதனை நடத்தினர். இதில் அவரது வீட்டில் கணக்கில் வராத ரூ.8 லட்சம் இருந்தது கண்டுபிடிக்கப் பட்டது.

                          இந்தப் பணம் வாக்காளர்களுக்குக் கொடுப்பதற்காக வைக்கப்பட்டுள்ள பணமாக இருக்கலாம் என்ற சந்தேகத் தின் பேரில் அதிகாரிகள் பறிமுதல் செய்தனர். திமுக ஒன்றியச் சேர்மன் வீட்டில் பணம் கைப்பற்றப்பட்ட சம்ப வம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.



                          இதுவரை ரூ.29 கோடி

                          செவ்வாயன்று சென்னையில் செய்தியாளர்களைச் சந்தித்த தமிழக தேர்தல் அதிகாரி பிரவீண்குமார், தமிழகத்தில் தேர்தல் நடத்தை விதிமுறை அமலானதில் இருந்து தேர்தல் கமிஷனின் பறக்கும் படையினர் தீவிர வாகன சோத னையில் ஈடுபட்டுள்ளனர். அவ்வாறு நடத் தப்பட்டு வரும் சோதனையில் கடந்த 3ம் தேதி வரை ரூ.28 கோடிக்கும் அதிகமான பணம் சிக்கியுள்ளது. மேலும், ரூ.10.30 கோடி பெறுமான பொருட்களும் பறி முதல் செய்யப்பட்டுள்ளன. இவற்றில் முறை யான ஆவணங்கள் இருந்த பணம் திருப்பி ஒப்படைக்கப்பட்டது என்று தெரிவித்தார்.

                          ஏமாற்று வித்தை

                          மத்திய அரசுடன் நட்பு ரீதியாக பேசி தமிழகத் தின் தேவைகளை நிறைவேற்றுவோம் என்று சென்னையில் நடைபெற்ற பிரச்சார கூட்டத்தில் பேசும்போது தமிழக முதல்வர் கருணாநிதி குறிப்பிட்டிருக்கிறார்.

                          கடந்த ஐந்தாண்டு காலம் தமிழகத்தில் திமுகதான் ஆட்சி செய்தது. மத்தியில் காங்கிர தலைமையிலான ஐக்கிய முற்போக்கு கூட் டணி அரசில் அங்கம் வகித்தது. இந்தக் காலம் முழுவதும் நட்பு ரீதியாக பேசி தமிழகத்தின் எந்தத் தேவையை நிறைவேற்றி இருக்கிறார்கள் என்று பார்த்தால், அவர்களது சொந்தத் தேவை யை நிறைவேற்றியிருக்கிறார்களே தவிர தமிழக மக்களின் தேவையை நிறைவேற்றவில்லை என்பது தெளிவாகும்.

                          மத்திய அமைச்சரவையில் எத்தனை அமைச்சர் பதவி தேவை, எந்தெந்த இலாகாக்கள் தேவை என்று கேட்டுப் பெற்றிருக்கிறது திமுக. தொலைத் தொடர்புத்துறையை பெற்றதன் மூலம் பெக்ட்ரம் ஊழலை நிகழ்த்தி தமிழகத்திற்கு தலைகுனிவை ஏற்படுத்தியுள்ளது. சேதுக்கால்வாய் திட்டம் மதவெறியர்களின் எதிர்ப்பு காரணமாக நீதிமன்றத்தின் மூலம் முடக்கப்பட்டுள்ளது. இந்த வழக்கை துரிதமாக நடத்தி சேதுக்கால்வாய் திட்டத்தை நிறைவேற்ற திமுக மத்திய அரசிடம் நட்பு ரீதியாக பேசியதா?

                          கோவையில் செம்மொழி மாநாடு நடத்திய போது, தமிழை மத்திய ஆட்சிமொழிகளில் ஒன்றாக மாற்ற வேண்டும் என்றும் உயர்நீதிமன்றத் தில் தமிழில் வழக்காடும் உரிமை வேண்டும் என்றும் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. இந்த மாநாட்டில் மத்திய அமைச்சர்களும் பங்கேற்றார்கள்.

                          இந்தக்கோரிக்கையை நட்பு ரீதியாக பேசி நிறைவேற்றியதா திமுக அரசு. திமுகவைச் சேர்ந்த மத்திய அமைச்சர் மு.க.அழகிரி நாடாளுமன்றத்தில் தமிழில் பேசும் உரிமையை  கூட நட்பு ரீதியாக பேசி பெறமுடியவில்லை என்பதுதானே உண்மை நிலை. காவிரி பிரச்சனை உள்ளிட்ட தமிழகம் தொடர்புடைய நதிநீர் தாவாக்களை தீர்க்க மத்திய அரசிடம் வாதாடியதுண்டா திமுக.
                          மத்திய கூட்டணியில் இடம்பெற்று எதை யுமே தமிழகத்திற்கு பெற்றுத்தராத நிலையில், இனிமேல் தேவைகளை நிறைவேற்றுவோம் என்று கூறுவதில் உண்மையின் சாயலாவது இருக்கிறதா? தமிழக மீனவர்கள் கொல்லப்படு வதை தடுக்க கடிதம் எழுதியதைத் தவிர நட்பு ரீதியாக திமுக எடுத்த நடவடிக்கை என்ன?

                          விலைவாசி உயர்வை தடுக்க கருணாநிதி என்ன செய்தார் என்று கம்யூனிட்டுகள் கேட்கிறார்கள் என்றும் அந்தக்கூட்டத்தில் குறிப்பிட்டுள்ளார் முதல்வர். இந்தக்கேள்வி  நியாயமான கேள்விதானே? பெட்ரோலுக்கு விலை தீர்மானிக்கும் முறை யை மத்திய அரசு கைவிட்டபோது  எதிர்த்ததா திமுக. பெட்ரோலியப் பொருட்களின் விலையை அடிக்கடி உயர்த்தி மக்களின் வாழ்வில் ஒரு நெருக்கடி நிலையை உருவாக்கிய போது  எதிர்த்துக்கேட்டதா திமுக. அனைத்து அத்தியாவசியப் பொருட்களின் விலைவாசி உயர்வுக்கு காரணமாக உள்ள மோசடி முன்பேர வர்த்தகத்தை தடை செய்ய வேண்டும் என்று திமுகவும் கூட பலமுறை வலியுறுத்தியுள்ளது.

                          ஆனால் அதை மத்திய அரசு கொஞ்சம்கூட பொருட்படுத்தவில்லை. அப்படி இருக்கும்போது கம்யூனிட்டுகள் கேள்வி எழுப்புவது நியாயம்தானே? பொருந்தாத  கூட்டணியை நியாயப்படுத்த பொருத்தமற்ற வாதங்களை முன்வைக்கிறார் கருணாநிதி. தமிழக மக்கள் நிச்சயம் ஏமாற மாட்டார்கள்.
                          Related Posts Plugin for WordPress, Blogger...