படிக்க...

pimp myspace with Gickr

அறிவிப்பு

இந்த வலைப்பக்கத்தை தமிழ்மணம் ‘ PAID AGGREGATION Category’ யில் வகைப்படுத்தி இருப்பதால், தமிழ்மணம் திரட்டியில் இணைக்கவில்லை. வாசகர்கள் google reader / e-mail subscriptions மூலமாக தொடர்ந்து ஆதரவளிக்க வேண்டுகிறோம்.

Subscribe in a reader

Subscribe to தீக்கதிர் by Email

Wednesday, April 6, 2011

ஆம்னி பேருந்தில் ரூ.5 கோடி திமுகவினரின் தில்லுமுல்லு அம்பலம்! அமைச்சர் நேரு உறவினர் பணம் கடத்தல்!!
தோல்வி உறுதி என்ற நிலையில் வாக்காளர்களுக்கு பணத்தை கொடுத்தாவது வெற்றி பெறலாம் என்ற நினைப்பில் திமுக பல்வேறு தில்லுமுல்லு வேலைகளில் ஈடுபட்டுள்ளது.

பணப்பட்டுவாடா என்ற ஜனநாயகப் படுகொலையை திமுக அரங்கேற்றி வரும் நிலையில், தமிழக போக்குவரத் துத்துறை அமைச்சர் கே.என்.நேரு வின் உறவினர் என்று கூறப்பட்ட உதய குமார் என்பவருக்குச் சொந்தமான ஆம்னி பேருந்திலிருந்து 5கோடி ரூபாய் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது. வாக்காளர்களுக்கு பட்டுவாடா செய்ய கொண்டு செல்லப்பட்ட பணமா என தேர்தல் அதிகாரிகள் விசாரணை நடத்தி வரு கின்றனர்.

சென்னையிலிருந்து திருச்சிக்கு வரும் ஆம்னி பேருந்தில் ரூ.5 கோடி பணம் உள்ளதாக திருச்சி கோட்டாட்சியரும், திருச்சி மேற்கு தொகுதி தேர் தல் நடத்தும் அலுவலருமான சங்கீதா விற்கு திங்களன்று நள்ளிரவு தகவல் கிடைத்தது. இதையடுத்து செவ்வாய் அதிகாலை 3மணியளவில் திருச்சி-திண்டுக்கல் சாலையில் பொன்னகர் அருகே நிறுத்தி வைக்கப்பட்டிருந்த தனியார் பேருந்தை சங்கீதா அதிரடியாக சோதனையிட்டார். அப்போது பேருந்தின் மேற்கூரையில் 5 பெரிய டிராவல்ஸ் பேக்குகள் படுதா போட்டு மூடப்பட்டிருந்தது. படுதாவை விலக்கி சோதனையிட்ட போது அவற்றில் ரூ.5 கோடியே 15லட்சத்து 27ஆயிரம் இருப்பதை சங்கீதா கண்டறிந்தார். அப்போது அங்கிருந்த ஆம்னி பஸ்டிரைவர் திடீரென ஓட்டம் பிடித்தார்.

இதுகுறித்து தேர்தல் அலுவலர் சங் கீதா உயர்அதிகாரிகளுக்கு தகவல் அளித்தார். இதையடுத்து தேர்தல் அலுவலர்கள் பணத்தை கைப்பற்றி வரு மானவரித் துறையினரிடம் ஒப்படைத் தனர்.

இதுகுறித்த விசாரணையில் பேருந்தின் உரிமையாளர் அதே பகுதியை சேர்ந்த உதயகுமார் என்பது தெரியவந்தது. அவரது வீட்டிலும் வருமானவரித் துறையினர் சோதனை நடத்தினர். உதயகுமாரையும் அவரது மேலாளர் பாலு வையும் விசாரணைக்காக அழைத்துச் சென்றனர். பஸ்உரிமையாளர் உதய குமார் அமைச்சர் நேருவிற்கு உறவினர் என்று கூறப்படுகிறது.

இது தமிழகம் முழுவதும் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

மதுரையில் ரூ.20லட்சம்

மதுரை மாவட்டத்தில் உள்ள பஞ்சா யத்து யூனியன் அலுவலகம் ஒன்றில் பணியாற்றுபவர் எம்.ராஜ்குமார். திருமங் கலம் சௌடார்பட்டி அருகேயுள்ள மீனாட்சிபுரத்தைச் சேர்ந்த இவரிடமிருந்து 1லட்சத்து 29ஆயிரத்து 500 ரூபாயை அதிகாரிகள் பறிமுதல் செய் துள்ளனர். இந்தப் பணம் நிலம் வாங்க வைத்திருந்தது என ராஜ்குமார் தெரிவித் துள்ளார். ஆனால் அதிகாரிகள் ஏற்க மறுத்துவிட்டனர். தேர்தல் நேரத்தில் திமுகவினர் பணப்பட்டுவாடா செய்து வரும் நிலையில் பணம் கருவூலத்தில் ஒப்படைக்கப்பட்டது. தொடர்ந்து விசாரணை நடைபெற்றுவருகிறது.

மதுரை மேற்குத் தொகுதியில் போட் டியிடும் திமுக மாவட்டச்செயலாளர் கோ.தளபதியின் தோல்வி உறுதியாகி விட்ட நிலையில் இத் தொகுதியில் பணப்பட்டுவாடா செய்யப்பட்டது. இதில் கூடல்நகர் என்ற இடத்தில் ரூ.20 லட்சமும், பரவை பகுதியில் ரூ.10 ஆயிரமும் பறிமுதல் செய்யப்பட்டது. மூவர் கைது செய்யப்பட்டனர்.

மதுரை திருமங்கலத்தில் போட்டியி டும் திமுக வேட்பாளர் மணிமாறனுக்கு ஆதரவாக பணப்பட்டுவாடா செய்த திருமங்கலம் சின்னசெங்குளத்தைச் சேர்ந்த பாண்டி என்பவரிடமிருந்து ரூ.62ஆயிரத்து 200 கைப்பற்றப்பட்டது.

கமுதி டீக்கடையில் ரூ.40 லட்சம்

முதுகுளத்தூர் தொகுதியில் திமுக. சார்பில் சத்தியமூர்த்தி போட்டியிடுகி றார். பெருநாழியைச் சேர்ந்தவர் பாண்டி. இவர் அப்பகுதியில் டீக்கடை நடத்தி வருகிறார். இவரது டீ கடையில் ரூ.40 லட்சம் பறிமுதல் செய்யப்பட்டது.

தர்மபுரியில் ரூ.9 லட்சம்

தர்மபுரி மாவட்டம் கடகத்தூரைச் சேர்ந்த திமுக கிளைச் செயலாளர் சேட்டு என்பவர் வாக்காளர்களுக்கு பணப்பட்டுவாடா செய்ய வைத்திருந்த ஒரு லட்சத்து 90ஆயிரம் ரூபாயையும், ஏ.கொள்ளஹள்ளியைச் சேர்ந்த திமுக கிளைச்செயலாளர் ஜனார்த்தனன் தனது வீட்டில் பதுக்கி வைத்து வாக்கா ளர்களுக்கு கொடுக்கவிருந்த 8லட்சம் ரூபாயையும் காவல்துறையினர் பறி முதல் செய்தனர்.

திமுக பிரமுகரை தப்பவிட்ட போலீஸ்

விழுப்புரத்தை அடுத்துள்ள சிறுவந் தாடு கிராமத்தில் திமுகவினர் நள்ளிர வில் வாக்காளர்களுக்கு பணம் கொடுப் பதாகக் கிடைத்த தகவலின் பேரில் காவல்துறையினர் சோதனை செய்த னர். இதில் 500 ரூபாய் நோட்டுக் கட் டுக்கள் அடங்கிய ரூ.2.5லட்சத்தை பறி முதல் செய்தனர். பிடிபட்ட நபரை தப்ப விட்ட காவல்துறையினர் பணத்தை மட்டும் தேர்தல் அதிகாரியிடம் ஒப்ப டைத்துள்ளனர். காவல்துறை தப்பவிட் டவரின் பெயர் மோகன் என்றும் அவர் திமுகவைச் சேர்ந்தவர் என்றும் தெரிய வந்தது. பணத்தை பறிமுதல் செய்து விட்டு, திமுக பிரமுகரை தப்பவிட்ட காவல்துறையினரை தேர்தல் அதிகாரி பிரியா கடுமையாக எச்சரித்தார். சம்பந் தப்பட்ட நபரை பிடித்து வரவேண்டு மெனவும் அவர் உத்தரவிட்டார்.

புதுக்கோட்டை

புதுக்கோட்டை மாவட்டம் அரிம ளம் ஊராட்சி ஒன்றியக் குழுத் தலை வராக இருப்பவர் பொன். ராமலிங்கம். இவரது வீட்டில் வாக்காளர்களுக்கு கொடுப்பதற்காக பணம் பதுக்கி வைக்கப்பட்டுள்ளதாக தேர்தல் ஆணையத்திற்குத் தகவல் வந்தது.

இத்தகவலையடுத்து திருமயம் தொகுதி தேர்தல் நடத்தும் அலுவலர் சசிகலா தலைமையில் வருமான வரித் துறையினர், வருவாய்த் துறையினர் மற் றும் பறக்கும் படையினர் பொன்.ராம லிங்கம் வீட்டில் சோதனை நடத்தினர். இதில் அவரது வீட்டில் கணக்கில் வராத ரூ.8 லட்சம் இருந்தது கண்டுபிடிக்கப் பட்டது.

இந்தப் பணம் வாக்காளர்களுக்குக் கொடுப்பதற்காக வைக்கப்பட்டுள்ள பணமாக இருக்கலாம் என்ற சந்தேகத் தின் பேரில் அதிகாரிகள் பறிமுதல் செய்தனர். திமுக ஒன்றியச் சேர்மன் வீட்டில் பணம் கைப்பற்றப்பட்ட சம்ப வம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.இதுவரை ரூ.29 கோடி

செவ்வாயன்று சென்னையில் செய்தியாளர்களைச் சந்தித்த தமிழக தேர்தல் அதிகாரி பிரவீண்குமார், தமிழகத்தில் தேர்தல் நடத்தை விதிமுறை அமலானதில் இருந்து தேர்தல் கமிஷனின் பறக்கும் படையினர் தீவிர வாகன சோத னையில் ஈடுபட்டுள்ளனர். அவ்வாறு நடத் தப்பட்டு வரும் சோதனையில் கடந்த 3ம் தேதி வரை ரூ.28 கோடிக்கும் அதிகமான பணம் சிக்கியுள்ளது. மேலும், ரூ.10.30 கோடி பெறுமான பொருட்களும் பறி முதல் செய்யப்பட்டுள்ளன. இவற்றில் முறை யான ஆவணங்கள் இருந்த பணம் திருப்பி ஒப்படைக்கப்பட்டது என்று தெரிவித்தார்.

No comments:

Related Posts Plugin for WordPress, Blogger...