Pages

படிக்க...

pimp myspace with Gickr

அறிவிப்பு

இந்த வலைப்பக்கத்தை தமிழ்மணம் ‘ PAID AGGREGATION Category’ யில் வகைப்படுத்தி இருப்பதால், தமிழ்மணம் திரட்டியில் இணைக்கவில்லை. வாசகர்கள் google reader / e-mail subscriptions மூலமாக தொடர்ந்து ஆதரவளிக்க வேண்டுகிறோம்.

Subscribe in a reader

Subscribe to தீக்கதிர் by Email

Sunday, April 10, 2011

மதுரை: பணம் மற்றும் உருட்டுக்கட்டைகளுடன் திமுகவினர்



மதுரையில் வாக்காளர்களுக்கு பணப்பட்டுவாடா செய்த திமுகவி னர் பலர் கைது செய்யப்பட்டுள் ளனர். பணப்பட்டுவாடாவுக்கு பயன்படுத்தப்பட்ட வாகனம், உருட்டுக்கட்டைகள் ஆகியவற்றை காவல்துறையினர் பறிமுதல் செய்தனர்.


மதுரை மேற்குத் தொகுதிக்குட்பட்ட பொன்மேனி பகுதியில் உள்ள தானத்தவத்தில் திமுகவி னர் வாக்காளர்களுக்கு பணப்பட்டு வாடா செய்துள்ளனர். இதையறிந்த அதிமுகவினர் அந்த இடத்திற்குச் சென்ற போது, ஒரு காரில் இருந்து சிலர் தப்பியோடி விட்டனர். வாகனத்தில் இருந்தவர்களைக் கைது செய்யக்கோரி அதிமுகவினர் மறியல் செய்தனர்.


தேர்தல் பறக் கும்படை அதிகாரிகள் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து விசாரணை நடத்தினர். மதுரை திருநகர் பேரூராட்சி தலைவர் இந்திரா காந்தி உள்ளிட்டோர் பணப்பட்டு வாடாவில் ஈடுபட்டதாக அதிமுகவினர் குற்றம்சாட்டினர். தேர்தல் அதிகாரிகள் கார் ஓட்டுநர் குரு சாமி, வாகனத்தில் இருந்த உசிலம் பட்டியைச்சேர்ந்த திமுகவினர் அண்ணாதுரை, முத்துராமன் ஆகி யோரிடம் விசாரணைநடத்தினர். இதுகுறித்து அதிமுக வட்டச்செயலாளர் மணி எ.எ.காலனி காவல்நிலையத்தில் புகார் செய்தார். இதையடுத்து கார் ஓட்டுநர் குருசாமி, அண்ணாதுரை, முத்துராமன் ஆகியோரை கைது செய்தனர்.


அவர்களிடமிருந்த 2900 ரூபாயையும், காரையும் பறிமுதல் செய்தனர். பொன்மேனி பகுதியில் கோவி லில் பணப்பட்டுவாடா நடைபெறுவதாக தேர்தல் பறக்கும் படைக்கு தகவல் கிடைத்தது. இதையடுத்து நேருநகர் காந்தி ரோட்டில் உள்ள காளியம்மன் கோவிலில் ஒருவர், பக்தர்களிடம் பணம் கொடுத்தது விசாரணையில் தெரியவந்தது. இதுகுறித்து காவல்துறையிடம் பறக்கும்படையினர் புகார் தெரிவித் தனர். காவல்துறையினர் அவரைப் பிடித்து விசாரித்த போது, அவர் பெயர் வெங்கட்ராஜ் என்று தெரிய வந்தது. அவரிடமிருந்து 10 ஆயி ரத்து 720 ரூபாயை காவல்துறையினர் பறிமுதல் செய்தனர்.


டி.ஆர்.காலனியில் வாக்காளர் களுக்கு திமுகவினர் பணப்பட்டு வாடா செய்வது குறித்து தகவலறிந்த தேர்தல் அதிகாரிகள், அங்கு சென்று விசாரணை நடத்தினர். அப்போது ஜவஹர்புரத்தைச் சேர்ந்த கோவிந் தராஜ்(54), அவரது மகன் சிவ குமார்(30), பழனியைச் சேர்ந்த ராஜா(34) ஆகியோர் வாக்காளர் களுக்கு வாக்கிற்கு 100 ரூபாய் வீதம் பட்டுவாடா செய்து திமுகவிற்கு வாக்களிக்கச் சொன்னது தெரியவந்தது. அவர்களை தல்லா குளம் காவல்துறையினர் கைது செய்தனர்.


கிழக்குத் தொகுதிக்குட்பட்ட வண்டியூர் மாந்தோப்பு பகுதியில் திமுக வேட்பாளர் பெ.மூர்த்தியின் ஆலோசனையின் பேரில் திமுக வைச் சேர்ந்த ராஜா, உசேன் ஆகியோர் ரூ.7,600 மதிப்பிலான பணக்கவர்களை எடுத்துக் கொண்டு வாக்காளர்களுக்கு கொடுத்துக் கொண்டிருந்தனர். அதிமுகவைச் சேர்ந்த ராஜன், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியைச் சேர்ந்த சமம், ஞானவேல். தமிழ்ராஜ் ஆகியோர் தேர்தல் அதிகாரிகளுக்கு தகவல் கொடுத்தனர். திமுகவைச் சேர்ந்த இருவர் மீதும் கருப்பாயூரணி காவல் நிலையத்தில் புகார் அளிக்கப்பட்டுள்ளது.


16 வது வார்டு மேலத் தோப்பு பகுதியில் வாக்காளர்களுக்குப் பணப்பட்டுவாடா செய்த திமுகவினர் இருவரை மார்க்சிட் கம்யூனிட் கட்சியினர் பிடித்து செல்லூர் காவல்நிலையத்தில் ஒப்படைத்தனர். விசாரணையில் பணப்பட்டுவாடா செய்தது பரமன், பிரசாந்த் எனத்தெரியவந்தது. அவர்களிடமிருந்து 800 ரூபாய் பறிமுதல் செய்யப்பட்டது.


மதுரை விவநாதநகர் அண் ணாதெருவில் வாக்காளர்களுக்குப் பணம் கொடுத்த அப்பகுதி யைச் சேர்ந்த நீலகண்டன்(21) என்பவரை காவல்துறையினர் கைது செய்தனர். அவரிடம் விசாரணை நடத்திய போது, அப்பகுதி யில் உள்ள 8 வீடுகளுக்கு 28 வாக்காளர்களுக்கு தலா 100 வீதம் 2800 ரூபாய் பணப்பட்டுவாடா செய்ததாகக் கூறினார். இதைய டுத்து தேர்தல் அதிகாரிகள் முன்னிலையில் பணம்பட்டுவாடா செய்யப்பட்ட வீடுகளில் விசாரணை நடத்தி 2800 ரூபாயை காவல்துறையினர் பறிமுதல் செய் தனர். இதுகுறித்து வாக்காளர்களி டம் விசாரணை நடத்திய போது, பணம் வாங்காவிட்டால், எதிர்கட்சிக்காரர்கள் எனப் பிரச்சனை செய்வார்கள் என்று பயந்து வாங்கினோம் எனக்கூறினர். அவர்களை காவல்துறையினர் எச்சரித்து விட்டுவிட்டனர். நீலகண்டனிடம் இருந்த 200 ரூபாயையும் பறிமுதல் செய்தனர்.


பந்தடி 7வது தெருவில் பணப்பட்டுவாடா செய்த இலியா(21) என்ற திமுகவைச் சேர்ந்தவரை காவல்துறையிடம் மார்க்சிட் கம்யூனிட் கட்சியினர் பிடித்து ஒப்படைத்தனர். அவரிடமிருந்து 2800 ரூபாயை தெற்குவாசல் காவல்துறையினர் பறிமுதல் செய்தனர்.

No comments:

Related Posts Plugin for WordPress, Blogger...