படிக்க...

pimp myspace with Gickr

அறிவிப்பு

இந்த வலைப்பக்கத்தை தமிழ்மணம் ‘ PAID AGGREGATION Category’ யில் வகைப்படுத்தி இருப்பதால், தமிழ்மணம் திரட்டியில் இணைக்கவில்லை. வாசகர்கள் google reader / e-mail subscriptions மூலமாக தொடர்ந்து ஆதரவளிக்க வேண்டுகிறோம்.

Subscribe in a reader

Subscribe to தீக்கதிர் by Email

Tuesday, April 12, 2011

சந்தேகம் சாமிக்கண்ணு -2தி.மு.க தலைவர் கருணாநிதி: “தேர்தல் ஆணையத்தில் உத்தமர்கள் வேண்டும்”

ச.சா: ஆட்சியாளர்களில், அமைச்சர்களில் வேண்டாமா?

__________________________________


மத்திய அமைச்சர் ஜி.கே.வாசன்
: “மத்திய அரசு சிறப்புத் திட்டங்களை அள்ளித் தருகிறது”

ச.சா“ஆமாமா, ஒவ்வொண்ணுல்லயும் ஒரு லட்சம் கோடி, ரெண்டு லட்சம் கோடின்னு அடிக்க முடியுது பாருங்க....”

__________________________________தமிழக பா.ஜ.க முன்னாள் தலைவர் இல.கணேசன்
: “தனிநபர் பற்றிப் பேசும்போது தரம் தாழ்ந்து பேசக் கூடாது”

ச.சா“ஓஹோ, ஒங்கள மாதிரி  முஸ்லீம், கிறித்துவர், தலித்துன்னு பகுதி பகுதியாத்தான் தரம் தாழ்ந்து பேசணுமோ”

__________________________________மத்திய அமைச்சர் பிரணாப் முகர்ஜி
: “கருத்தொற்றுமை இல்லாததால் லோக்பால் மசோதா நிறைவேற்றப்படவில்லை”

ச.சா: “மகளிருக்கு இட ஒதுக்கீடு, லோக்பால் மசோதா.... இதுக்கெல்லாம் கருத்தொற்றுமை இல்லைன்னு கிடப்புல போட்டுருவீங்க. அமெரிக்காவோட ஒப்பந்தம்னா லஞ்சம் கொடுத்தாவது நிறைவேத்துவீங்க”

No comments:

Related Posts Plugin for WordPress, Blogger...