கடலில் மீன் பிடிக்கச் செல்லும் மீனவர் களுக்கு உரிய பாதுகாப்பு வழங்குவதை உத் தரவாதப்படுத்த வேண்டும் என மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி தமிழக அரசை வலி யுறுத்தியுள்ளது. மீனவர்கள் கொல்லப்பட்டது குறித்து உரிய விசாரணை நடத்தி, நாட்டு மக்களுக்கு உண்மையை மத்திய அரசு தெளிவுபடுத்த வேண்டும் என்றும், உயிரிழந்த மீனவர்கள் குடும்பத்தில் ஒருவருக்கு அரசு வேலை வழங்க வேண்டும் என்றும் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி வலியுறுத்தியுள்ளது.
இராமேஸ்வரம் மீனவர்கள் நான்குபேர் மீன்பிடிக்கச்சென்றபோது கொடூரமான முறையில் வெட்டிப் படுகொலை செய்யப்பட் டனர். உயிர்ப்பலியான மீனவர்களின் குடும்பத் தினர், குழந்தைகள் மற்றும் அவர்களது உற வினர்களையும் மீனவ மக்களையும் மார்க் சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் தமிழ்நாடு மாநிலக்குழு சார்பாக மாநில செயற்குழு உறுப்பினர் எஸ்.நூர்முகம்மது, கோவை தொகுதி நாடாளுமன்ற உறுப்பினர் பி.ஆர்.நட ராஜன், மதுரை கிழக்குத்தொகுதி சட்டமன்ற உறுப்பினர் என்.நன்மாறன், மீன்பிடிதொழிற் சங்க கூட்டமைப்பின் மாநிலப் பொதுச் செய லாளர் பா.கருணாநிதி மற்றும் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி நிர்வாகிகள் வியாழ னன்று நேரில் சந்தித்து ஆறுதல் கூறினர்.
தொடர்ந்து மீன்பிடி தடைக்காலங்களில் மீனவர்களுக்கும் அதனை நம்பியுள்ள ஆயிரக்கணக்கான தொழிலாளர்களுக்கும் உள்ள இடர்பாடுகள் குறித்து கேட்டறிந்தனர்.
பின்னர் அவர்கள் கூறியதாவது:
தமிழக மீனவர்கள் கொடூரமான முறை யில் படுகொலை செய்யப்படுவது தொடரும் நிலையில், அவர்களைப் பாதுகாக்க உரிய முறையில் துரிதமான நடவடிக்கை மேற் கொள்ளாமல் மத்திய - மாநில அரசுகள் பொறுப்பற்று இருக்கின்றன.
கடலில் மீன்பிடிக்கச் செல்லும் மீனவர் கள் படுகொலை செய்யப்படுவதும், ஒவ் வொரு முறையும் தமிழக முதல்வர் கருணா நிதி உரிய பாதுகாப்பு கொடுக்க வேண்டு மென்று மத்திய அரசுக்குக் கடிதம் எழுதி விட்டு, மத்திய அரசு உத்தரவாதம் அளித்து விட்டது என்று கூறி தன்னுடைய கடமை முடிந்துவிட்டது என்று இருப்பதும், ஆனால் மீனவர்கள் படுகொலை செய்யப்படும் கொடு மை நடைபெறுவதும் தொடர்கதையாக உள்ளது.
இந்த நிலையில் ஏப்ரல் மாதம்2ம் தேதி இராமேஸ்வரத்திலிருந்து விக்டர்ஸ், மாரி முத்து, அந்தோணிராஜ், ஜான்பால் எனும் 4 மீனவர்கள் மீன்பிடிப்பதற்காக கடலுக்குச் சென்றுள்ளனர். நாட்கள் சில கடந்தும் அவர் கள் கரை திரும்பாததால் கவலையடைந்த சக மீனவர்களும், உறவினர்களும் அவர் களைத் தேடி வந்தனர். இந்நிலையில் இலங் கையில் உள்ள இந்திய தூதரகத்திலிருந்து இலங்கை டெல்ப் தீவின் அருகில் ஒரு உடல் அழுகிய நிலையில் கரை ஒதுங்கி கிடைத்துள்ளதாகத் தகவல் வந்ததன் பேரில் மீனவர்களது உறவினர்கள் இலங் கைக்கு அழைத்துச் செல்லப்பட்டு, அங்கு கிடந்த உடல் இராமேஸ்வரம் மீனவர் விக்டர்ஸ் என்பவரின் உடல்தான் என அடையாளம் காணப்பட்டு, அங்கேயே இறுதிச் சடங்கும் நடத்தப்பட்டது. மற்ற மூன்று மீனவர்களின் உடலைத் தேடி வந்த நிலையில் ஏப்ரல் 12ம் தேதி அந்தோணி ராஜ் என்ற மீனவரின் உடல் சோலியாக்குடி யிலும், ஏப்ரல் 14ம் தேதி ஜான்பால் என்ற மீன வரின் உடல் காசிப்பட்டினத்திலும், ஏப்ரல் 16ம் தேதி மாரிமுத்து என்ற மீனவரின் உடல் கோட்டைப்பட்டினத்திலும் கரை ஒதுங்கிய நிலையில் கிடைத்துள்ளன. இந்த நான்கு பேரின் உடல்களும் உருக்குலைந்த நிலை யில்தான் கிடைத்துள்ளன. இந்த மீனவர்கள் அனைவரும் கொல்லப்பட்டு, கடலில் வீசப் பட்டுள்ளனர்.
பாதுகாப்பு உத்தரவாதம்
கடலில் மீன்பிடித்து, அதில் கிடைக்கும் வருமானத்தின் மூலமே தங்கள் வாழ்க்கை யை நடத்த முடியும் என்ற நிலையில் கட லுக்குச் செல்லும் மீனவர்களுக்கு எவ்வித பாதுகாப்பும் இல்லாத நிலை தொடர்வது மீனவர்கள் மத்தியில் அச்சத்தையும், மக்கள் மத்தியில் கோபத்தையும் ஏற்படுத்தியுள்ளது.
கடலில் மீன் பிடிக்கச் செல்லும் மீனவர் களுக்கு உரிய பாதுகாப்பு வழங்குவதை உத்தரவாதப்படுத்திடும் வகையில் உரிய நடவடிக்கைகளை மத்திய, மாநில அரசுகள் மேற்கொள்ள வேண்டும்.
நீதிவிசாரணை
இந்த கொலைகள் குறித்து உரிய விசா ரணை நடத்தி, நாட்டு மக்களுக்கு உண்மை யைத் தெளிவுபடுத்த வேண்டிய பொறுப்பு மத்திய அரசுக்கு உள்ளது.
அரசுவேலை
உயிரிழந்த மீனவர்கள் குடும்பத்தில் ஒருவருக்கு அரசு வேலை வழங்கவேண் டும். மீன்பிடிப்பதற்கு விதிக்கப்பட்ட தடைக் காலமான 45 நாட்களுக்கும் மீனவர்களை யும் அவர்களை நம்பியுள்ள குடும்பங்களை யும் பாதுகாக்கும் வகையில் நாள் ஒன்றுக்கு ரூ.150 (ஆண், பெண் இரு பாலருக்கும்) தமிழக அரசு வழங்கவேண்டும்.
|
No comments:
Post a Comment