மத்திய அரசுடன் நட்பு ரீதியாக பேசி தமிழகத் தின் தேவைகளை நிறைவேற்றுவோம் என்று சென்னையில் நடைபெற்ற பிரச்சார கூட்டத்தில் பேசும்போது தமிழக முதல்வர் கருணாநிதி குறிப்பிட்டிருக்கிறார்.
கடந்த ஐந்தாண்டு காலம் தமிழகத்தில் திமுகதான் ஆட்சி செய்தது. மத்தியில் காங்கிர தலைமையிலான ஐக்கிய முற்போக்கு கூட் டணி அரசில் அங்கம் வகித்தது. இந்தக் காலம் முழுவதும் நட்பு ரீதியாக பேசி தமிழகத்தின் எந்தத் தேவையை நிறைவேற்றி இருக்கிறார்கள் என்று பார்த்தால், அவர்களது சொந்தத் தேவை யை நிறைவேற்றியிருக்கிறார்களே தவிர தமிழக மக்களின் தேவையை நிறைவேற்றவில்லை என்பது தெளிவாகும்.
மத்திய அமைச்சரவையில் எத்தனை அமைச்சர் பதவி தேவை, எந்தெந்த இலாகாக்கள் தேவை என்று கேட்டுப் பெற்றிருக்கிறது திமுக. தொலைத் தொடர்புத்துறையை பெற்றதன் மூலம் பெக்ட்ரம் ஊழலை நிகழ்த்தி தமிழகத்திற்கு தலைகுனிவை ஏற்படுத்தியுள்ளது. சேதுக்கால்வாய் திட்டம் மதவெறியர்களின் எதிர்ப்பு காரணமாக நீதிமன்றத்தின் மூலம் முடக்கப்பட்டுள்ளது. இந்த வழக்கை துரிதமாக நடத்தி சேதுக்கால்வாய் திட்டத்தை நிறைவேற்ற திமுக மத்திய அரசிடம் நட்பு ரீதியாக பேசியதா?
கோவையில் செம்மொழி மாநாடு நடத்திய போது, தமிழை மத்திய ஆட்சிமொழிகளில் ஒன்றாக மாற்ற வேண்டும் என்றும் உயர்நீதிமன்றத் தில் தமிழில் வழக்காடும் உரிமை வேண்டும் என்றும் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. இந்த மாநாட்டில் மத்திய அமைச்சர்களும் பங்கேற்றார்கள்.
இந்தக்கோரிக்கையை நட்பு ரீதியாக பேசி நிறைவேற்றியதா திமுக அரசு. திமுகவைச் சேர்ந்த மத்திய அமைச்சர் மு.க.அழகிரி நாடாளுமன்றத்தில் தமிழில் பேசும் உரிமையை கூட நட்பு ரீதியாக பேசி பெறமுடியவில்லை என்பதுதானே உண்மை நிலை. காவிரி பிரச்சனை உள்ளிட்ட தமிழகம் தொடர்புடைய நதிநீர் தாவாக்களை தீர்க்க மத்திய அரசிடம் வாதாடியதுண்டா திமுக.
மத்திய கூட்டணியில் இடம்பெற்று எதை யுமே தமிழகத்திற்கு பெற்றுத்தராத நிலையில், இனிமேல் தேவைகளை நிறைவேற்றுவோம் என்று கூறுவதில் உண்மையின் சாயலாவது இருக்கிறதா? தமிழக மீனவர்கள் கொல்லப்படு வதை தடுக்க கடிதம் எழுதியதைத் தவிர நட்பு ரீதியாக திமுக எடுத்த நடவடிக்கை என்ன?
விலைவாசி உயர்வை தடுக்க கருணாநிதி என்ன செய்தார் என்று கம்யூனிட்டுகள் கேட்கிறார்கள் என்றும் அந்தக்கூட்டத்தில் குறிப்பிட்டுள்ளார் முதல்வர். இந்தக்கேள்வி நியாயமான கேள்விதானே? பெட்ரோலுக்கு விலை தீர்மானிக்கும் முறை யை மத்திய அரசு கைவிட்டபோது எதிர்த்ததா திமுக. பெட்ரோலியப் பொருட்களின் விலையை அடிக்கடி உயர்த்தி மக்களின் வாழ்வில் ஒரு நெருக்கடி நிலையை உருவாக்கிய போது எதிர்த்துக்கேட்டதா திமுக. அனைத்து அத்தியாவசியப் பொருட்களின் விலைவாசி உயர்வுக்கு காரணமாக உள்ள மோசடி முன்பேர வர்த்தகத்தை தடை செய்ய வேண்டும் என்று திமுகவும் கூட பலமுறை வலியுறுத்தியுள்ளது.
ஆனால் அதை மத்திய அரசு கொஞ்சம்கூட பொருட்படுத்தவில்லை. அப்படி இருக்கும்போது கம்யூனிட்டுகள் கேள்வி எழுப்புவது நியாயம்தானே? பொருந்தாத கூட்டணியை நியாயப்படுத்த பொருத்தமற்ற வாதங்களை முன்வைக்கிறார் கருணாநிதி. தமிழக மக்கள் நிச்சயம் ஏமாற மாட்டார்கள்.
Tweet

No comments:
Post a Comment